காவிரி உரிமை மற்றும் குறுவை நிவாரணம் குறித்து சட்டசபையில் முதல்வர் விஜய் ஆற்றிய காரசார உரை! தமிழக நலனுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என அதிரடி அறிவிப்பு.
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் என்றும் தலையாயதாக இருக்கும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில், மாநிலத்தின் உரிமையையும் விவசாயிகளின் நலனையும் காப்பதே தனது முதன்மை நோக்கம் என்பதை தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் காரசாரமான கேள்விகளுக்கு நடுவே, உணர்ச்சிப்பூர்வமாகவும் அதேவேளையில் மிகுந்த உறுதியோடும் அவர் ஆற்றிய உரை, சட்டமன்றத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
25
. தமிழகத்தின் உரிமைகளை எக்காரணம் கொண்டும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.!
சட்டப்பேரவையில் காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி என்பது வெறுமனே நதிநீர் பிரச்சனை அல்ல, அது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உயிர் ஆதாரம் என்று குறிப்பிட்டார். "காவிரி விவகாரத்தை வைத்து அரசியலில் லாபம் தேடும் எண்ணம் நமக்கு என்றும் இல்லை. தமிழகத்தின் உரிமைகளை எக்காரணம் கொண்டும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம்" என்று கம்பீரமாகத் தெரிவித்தார். மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் காவிரி குறித்து முழுமையான தகவல்களைத் தெரிவிக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி பிரதமருக்கு நேர்முகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
35
ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் என்பதே நமது நிலைப்பாடு.!
அண்டை மாநிலமான கர்நாடகாவுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த முதல்வர், "உலக அரங்கில் ஒன்றுக்கொன்று பகை நாடுகளாக இருக்கும் நாடுகளே கூட தங்களின் பொதுப் பிரச்சினைகளுக்காக பேச்சுவார்த்தை மேசைக்கு வரும்போது, பக்கத்து மாநிலங்களுடன் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை. சட்டப்பூர்வமாகச் சிக்கலை அணுகத் தயாராக இருக்கும் அதே வேளையில், பேச்சுவார்த்தை மூலமும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் என்பதே நமது நிலைப்பாடு" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "கர்நாடகாவுடன் பேசும்போது ஏதேனும் அவமானம் நேர்ந்தால் என்ன செய்வது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாட்டிற்காகவும், தமிழக மக்களின் உரிமைக்காகவும் எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ள நான் தயார்" என்று அதிரடியாக முழங்கினார்.
வரலாற்றுச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி மலிவான அரசியலில் ஈடுபடத் தான் விரும்பவில்லை என்பதை உணர்த்திய முதல்வர் விஜய், 1969-ல் கர்நாடகாவில் அணைகள் கட்டப்பட்டபோது நடைபெற்ற சட்டமன்ற விவாதங்களைக் குறிப்பிட்டாலும், "அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் யார், ஏன் அணை கட்ட விட்டீர்கள் என்று பழைய கதைகளைப் பேசி மலிவு அரசியல் செய்ய விரும்பவில்லை. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பதே இப்போது நமது இலக்கு" என்று தெளிவுபடுத்தினார்.
55
முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே இந்த உண்மை புரிந்திருக்கும்
மேலும், எதிர்க்கட்சிகளின் நிவாரணக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த அவர், "குறுவை சாகுபடிக்கான நிவாரணங்களை அரசு ஏற்கனவே வழங்கிவிட்டது. 'அரசியலே நாங்கதான்' என்று பேசிக் கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே இந்த உண்மை புரிந்திருக்கும்" என்று பதிலடி கொடுத்தார். காவிரி உரிமையில் துளி அளவும் விட்டுக் கொடுக்காமல், அரசியல் பாகுபாடின்றி தமிழகத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுவேன் என்ற முதல்வர் விஜய்யின் இந்த கம்பீரமான பேச்சு, பேரவையில் பெரும் வரவெற்பைப் பெற்றுள்ளது.