எனவே விசிகாவா? அல்லது பாமகவா? என்ற தேர்வு வந்தால் திமுகவின் முன்னுரிமை விசிக என்பது அரசியல் வட்டாரங்களில் பரவலாக நிலவுக்க்கூடிய கருத்து. அதனால்தான் இதுவரை ராமதாஸ் தலைமையிலான பாமகவை திமுக வெளிப்படையாக கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த விரிசலுக்கான வேர்கள் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் போட்டியிட்டனர். ஆனால், அந்த கூட்டணி வெற்றி பெற்றது. அந்த தேர்தலுக்கு பிறகு பாமக விசிகவை இணைப்பது திமுகவுக்கு எந்த அரசியல் பலனைகள் தரவில்லை என்ற கருத்து திமுக தரப்பில் மட்டுமல்ல அரசியல் வட்டாரங்களிலேயே பரவலாக பேசப்பட்டது. பாமக மற்றும் விசிக இடையே கருத்து மோதல்களும் தீவிரமடைந்தே வருகிறது.
2012 ஆம் ஆண்டு தர்மபுரி கலவரம், 2013 ஆம் ஆண்டு மரக்காணம் கலவரம் போன்ற சம்பவங்கள் இரு கட்சிகளுக்கு இடையேயான உறவை முற்றிலுமாக பதற்றமடைய வைத்தது. வன்னியர் சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் கட்சியாக பாமகவும், தலித் மக்களின் அரசியல் குரலாக விசிகவும் நேரடியாக மோதும் நிலை உருவானது. இதற்கு முன்பு வரை ராமதாஸும், திருமாவளவனும் தமிழ் மொழி, ஈழப் பிரச்சனை, சமூக நீதி போன்ற பல விஷயங்களில் ஒரேமேடையில குரல் கொடுத்தவர்களதான். ஆனால் 2011க்கு பிறகு அவர்கள் அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர். அதன் பிறகு நடந்த எந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் இடம் பெறவில்லை. இந்த பின்னணியில்தான் பாமக இருக்கக்கூடிய கூட்டணியில் விசிக இருக்காது என்று திருமாவளவனின் உறுதியான நிலைப்பாடு உருவானது.