பிப்ரவரி மூன்றாவது வாரம் தன்னுடைய முடிவை வெளியிடலாம் என பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதுவாகினும் இனிமேல் பிரேமலதா விஜயகாந்த் மட்டுமே தாழ்ந்து வர வேண்டிய சூழ்நிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதேவேளை வரலாறு காணாத வகையில் தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணியை இறுதி செய்யும் வேலைகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. வழக்கம் போல தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என சீமான் சொல்லியிருந்த நிலையில் தவெக, அதிமுக, திமுக இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணி மிகப்பெரிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல கட்சிகளும் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.
24
பிரேமலதா மீது கடுப்பான எடப்பாடி பழனிசாமி
அதேபோல் அதிமுக தரப்பிலும் பாஜக தங்களுக்கு தொகுதிகளை அதிகப்படுத்தி தரவேண்டும், அமைச்சரவையில் இடம் என ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக, பிரேமலதா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள்? என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது பற்றி தினந்தோறும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் பிரேமலதா விஜயகாந்த் அளவுக்கு அதிகமான கோரிக்கைகளை வைத்து, திமுக -அதிமுக இரண்டு கட்சிகளையும் நெருக்கடி செய்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளாவது ஒதுக்கித் தர வேண்டும். விருதுநகர் தொகுதியை என்னுடைய மகன் விஜய பிரபாகரனுக்கு ஒதுக்கி தரவேண்டும். அத்தோடு ராஜ்யசபா பதவி தரவேண்டும்.
34
திமுக ஆட்சி மீது விமரசனம்
அது மட்டும் இல்லாமல் தேர்தல் செலவு பொறுப்புகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரி வருகிறார். அதிமுக தரப்பில் மொத்தமாகவே இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட பணிகளில்க் இறங்கிட்டார். பிரேம்லதா விஜயகாந்த் பேரம்பேசுவது தமிழ்நாடு முழுவதும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ரொம்பவும் கடுப்பான நிலையில் இருக்கிறார். இதற்கிடையில் திமுக தரப்பில் தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவித்தனர். முன்பு அதிமுக சார்பில் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையில், அடுத்த கட்டமாக தேமுதிக தரப்பிடம் அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடடத்தினார்.
விஜயபிரபாகரனுக்கு ராஜ்யசபா பதவி தருவதாகவும், விருதுநகர் தொகுதி ஒதுக்கி தருவதாகவும், தேர்தல் செலவு பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதாகவும், ஆண்டாள் அழகர் கல்லூரி விற்கப்பட்ட விவகாரத்தில் மீதம் இருக்கிற 150 கோடி ரூபாய் பணம் வசூலித்து தருவடாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விஜய பரிபாகரனுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கும் நிலையில் அவர் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அதே சமயத்தில் தோல்வி அடைந்தால் ராஜ்யசபா பதவி ஒதுக்கி தரப்படும் என்றெல்லாம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருந்தாலும் பிரேமலதா விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். தக்க சமயம் பார்த்து திமுக தரப்பையும் தாக்கி பேசிக் கொண்டு வருகிறார். திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர் பேசி வருகிறார்.
44
தாழ்ந்து போன பிரேமலதா
இந்த நிலையில் இப்போது மு.க.ஸ்டாலினும் பிரேமலதாவின் நடவடிக்கைகள் பற்றி ரொம்பவும் கடுப்பான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரேமலதா விஜயகாந்டுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை இனிமேல் தொடர வேண்டாம். அவர்களாவே தேடி வரட்டும். கூட்டணியில் தேமுதிக இல்லை என்றாலும் பரவாயில்லை என இறுதி முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பிரேமலதா விஜயகாந்தின் பேரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அவர் அளவுக்கு மீறி பேரம் பேசுவதாக தமிழ்நாட்டு மக்கள் அவர் மீது கடுப்பில் உள்ளனர். இது தேமுதிக மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த நிலையில் பிப்ரவரி மூன்றாவது வாரம் தன்னுடைய முடிவை வெளியிடலாம் என பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதுவாகினும் இனிமேல் பிரேமலதா விஜயகாந்த் மட்டுமே தாழ்ந்து வர வேண்டிய சூழ்நிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது.