தேர்தல் நெருக்கத்தில்... திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட 'சென்னை சூப்பர் 6' திராவிட மாடல் 2.0 வாக்குறுதிகள்!

Published : Apr 19, 2026, 08:07 PM IST

Chennai Super 6 Manifesto: முதலமைச்சர் M. K. ஸ்டாலின் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் புதிய 'சூப்பர் 6' தேர்தல் வாக்குறுதி அண்ணா அறிவாலயம் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

PREV
17
'சென்னை சூப்பர் 6' திராவிட மாடல் 2.0 வாக்குறுதிகள்:

இந்த 'சென்னை சூப்பர் 6' திராவிட மாடல் 2.0 வாக்குறுதியில். நகர்ப்புற அடிப்படை வசதிகள், போக்குவரத்து, கட்டுமான பணிகள், தெருநாய் மேலாண்மை, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில் மேம்பாடு ஆகியவை இடம்பெற்றுள்ளது.

27
பொதுப் போக்குவரத்து மற்றும் இணைப்பு:

இந்தத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். மெட்ரோ நீர் வசதி இல்லாத பகுதிகளில் RO குடிநீர் வழங்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள பகுதிகளில் தண்ணீர் விநியோகம் சீராக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் அதிக ஒளியுடன் தெருவிளக்குகள் அமைக்கப்படவுள்ளன. கலை, இசை, இலக்கியத்திற்கான உலகத் தரமான கலாச்சார மையமும் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

37
நகர போக்குவரத்து மேம்பாடு:

நகர போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இவை பஸ் நிறுத்தங்கள், மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்களுடன் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் கொண்டு நெரிசலை குறைத்து, பயண நேரத்தை 25 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

47
காலக்கெடு உடைய கட்டுமான திட்டங்கள்:

முக்கிய கட்டுமான திட்டங்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Ennore–பூஞ்சேரி சென்னை புறவழிச்சாலை 2027க்குள் முடிக்கப்படும் என்றும், மெட்ரோ ரெயில் விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் 2028க்குள் நிறைவேற்றப்படும் என்றும் இந்த வாக்கறுதியில் கூறப்பட்டுள்ளது . 2029- க்குள் சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

57
தொழில்நுட்ப மையம்: 

₹10,000 கோடி முதலீட்டில், செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன், கேமிங், மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VFX/Immersive Tech) ஆகியவற்றில் கவனம் செலுத்தும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையம் (Global Centre of Excellence) அமைக்கப்படும். இதன் மூலம் 20,000 பேருக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

67
தெரு நாய் மேலாண்மை:

தெருநாய் பிரச்சினைக்கு அறிவியல் முறையில் தீர்வு காணும் வகையில் Animal Birth Control திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும், மருத்துவர் மற்றும் நாய் பிடிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புதிய பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

77
குடியிருப்பு மேம்பாடு: 

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் (TNUHDB) பெண்களின் குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம், அரசு நிதியுதவியுடன் பொது உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், “சென்னை சூப்பர்-6” திட்டங்கள் மூலம் சென்னை நகரத்தை உலகத் தர நகரமாக மாற்றும் நோக்கில் இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் 6 திராவிட மாடல் 2.0 அறிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories