எந்திரன் படம் எப்போது வந்தது? ரஜினி சாரோட படம் எந்திரன். அந்த படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரகுமான், சங்கர் அப்புறம் ஒரு ஹிந்தி நடிகர். அதற்கடுத்து பெரிய சம்பளம் வாங்கிய நடிகன் நான். அந்த படத்தில் ஆறாவது பெரிய சம்பளம் வாங்கியவன் நான் தான். ஆனால், அப்பொழுதுதான் நான் சார்ந்த மக்களுடைய அடிப்படை உரிமைகள், மறுக்கப்படுகின்ற உரிமைகள், மக்கள் தொகையின் அடிப்படையில் என் மக்களுக்கான இட ஒதுக்கீடு பெறுகின்ற நிலையை வரையறுத்து அதற்காகத்தான் நான் இந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியை ஆரம்பித்தேன்.
இப்போது நான் பொருளாதார ரீதியாக அதற்கு பின்னால் கீழே தான் விழுந்திருக்கிறேன். ஆனால் ஏதோ ஒரு பத்து பேருக்காவது உண்மையாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்கிற சந்தோஷம் என் மனதிற்குள் இருக்கிறது. இப்போது 200 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு ஒரு நடிகர் வருகிறார். ஏற்கனவே தான் உன்னிடம் 2000 கோடி ரூபாய் இருக்கிறதே. இருந்தால் என்ன? இல்லாட்டி என்ன? ஒரு அக்கவுண்ட் நம்பர் தான் எச்டிஎப்சி பேங்கில் எனக்கு இருக்கிறது. என் போனை எடுத்து ஓபன் செய்து பாருங்கள். அதில் குறைந்தபட்சம் ஒரு 50 ஆயிரம் ரூபாய் இருந்தால் பெரிய விஷயம். ஐம்பதாயிரம் கூட சேவிங்கில் நான் வைத்துக் கொண்டதில்லை. 200 கோடி வாங்குபவரை எதிர்த்து பேசுகிறேன் என எத்தனை பேர் கேட்டிருப்பார்கள். காசு இன்றைக்கு இருக்கும், நாளைக்கு போய்விடும். அது இங்கு பிரச்சனை இல்லை.