தனித்து நின்றால் விஜய்க்கு 80 சீட் உறுதி! அடித்துச் சொல்லும் ரிப்போர்ட்! கதி கலங்கும் கோட்டை!

Published : Mar 19, 2026, 10:02 AM IST

விஜய்யின் அரசியல் நகர்வுகள், திமுக,  அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளை அதிர வைத்துள்ளது. ரகசிய் கருத்து கணிப்புகளின் அடிப்படையில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ள விஜய் ஊழலற்ற ஆட்சி என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.

PREV
16
சாதகமான அரசியல் கணக்குகள்

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அதிரடி அரசியல் நகர்வுகள் தான். திமுக, அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு மத்தியில், பாஜக-வையும் சேர்த்து அனைத்து பிரதான கட்சிகளையும் தவெக-வின் வளர்ச்சி அதிர வைத்துள்ளது. குறிப்பாக, விஜய்யின் சமீபத்திய முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் கணக்குகளைப் பார்த்தால், அவர் ஒரு தீர்க்கமான பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது தெளிவாகிறது.

26
பயத்தில் பழைய கட்சிகள்!

ஆளும் கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மட்டுமல்லாமல், தேசிய கட்சியான பாஜக-வும் விஜய்யின் அரசியல் வருகையைக் கண்டு கலக்கத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஜாதிச் சங்கங்கள் மற்றும் பல கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும், கடந்த காலங்களில் திமுக தோல்வியைத் தழுவிய வரலாற்றைத் தனது தொண்டர்களிடம் விஜய் சுட்டிக்காட்டி வருகிறார். "கூட்டணி பலத்தை விடக் கொள்கை பலமே முக்கியம்" என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

36
ரகசியக் கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?

திமுக-வின் உளவுத்துறை மற்றும் விஜய்யின் இளைஞர் படை எடுத்த ரகசியக் கருத்துக் கணிப்புகளின்படி, விஜய் தனித்துப் போட்டியிட்டால் குறைந்தபட்சம் 80 தொகுதிகளில் பெரும்பாண்மையுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக யாராவது வரமாட்டார்களா? என்று ஏங்கும் அடிமட்டத் தொண்டனின் இதயத்தில் தான் இடம் பிடித்துவிட்டதாக விஜய் தனது நெருக்கமானவர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

46
பழிவாங்க அல்ல... சுயரூபம் காட்ட!

விஜய்யின் இந்தத் தீவிர அரசியலுக்குப் பின்னால் சில தனிப்பட்ட காரணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது படங்களை ரிலீஸ் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போட்டவர்கள், மிரட்டல் விடுத்தவர்கள் மற்றும் அவரது குடும்பப் பிரச்சினையைப் பொதுவெளியில் பெரிதாக்க முயன்றவர்களுக்குத் தன்னுடைய 'சுயரூபத்தை' அரசியல் களத்தில் காட்ட அவர் முடிவு செய்துள்ளார். 

56
"ஊழலற்ற ஆட்சி, சமரசமற்ற கொள்கை"

"ஊழலற்ற ஆட்சி, சமரசமற்ற கொள்கை" என்ற ஒற்றை இலக்கோடு, எதற்கும் அடிபணியாமல் தனி ஒருவனாகக் களமிறங்கும் விஜய்யின் இந்த வேகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

66
நேர்மை, நம்பிக்கை, வெற்றி

தமிழக அரசியலில் "கூட்டணி" என்ற பிம்பத்தை உடைத்து, "தனி ஒருவன்" என்ற துணிச்சலான பாதையை விஜய் தேர்ந்தெடுத்துள்ளார். திமுக, அதிமுக போன்ற பாரம்பரியக் கட்சிகளின் கோட்டையைத் தகர்க்க, அவர் வெறும் நட்சத்திர அந்தஸ்தை மட்டும் நம்பாமல், அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளையும் ரகசியக் கருத்துக் கணிப்புகளின் பலத்தையும் நம்பிக் களமிறங்கியுள்ளார். தன்னை முடக்க நினைத்தவர்களுக்கும், குடும்பப் பிரச்சினையை அரசியலாக்கியவர்களுக்கும் தனது "சுயரூபத்தை" செயலில் காட்ட அவர் முடிவெடுத்திருப்பது தெளிவாகிறது. ஊழலற்ற ஆட்சி மற்றும் சமரசமற்ற கொள்கை என்ற விஜய்யின் இந்த உறுதி, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமாக அமையப் போவது உறுதி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories