எங்களை தொட்டுப்பார்த்து விட்டார்... இனி விஜயை விட மாட்டோம்..! அதிமுக ஆவேசம்..!

Published : Jan 29, 2026, 04:33 PM IST

சத்யா ஸ்டுடியோவை கல்லூரிக்கு கொடுத்தார். தான் வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தை காது கேளாதோர், வாய் பேசாதோர், கண் தெரியாததற்கான உண்டு உறைவிட பள்ளியாக கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்.

PREV
14

‘‘எங்களை யார் தொட்டு பார்த்தாலும் நாங்கள் சும்மா விட மாட்டோம். புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட கூடாது. விஜயை யாரும் விமர்சிக்க தயாராக இல்லை’’ என அதிமுக தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘ அண்ணா திமுகவை விஜய் விமர்சிப்பாரேயானால் நிச்சயமாக நாங்கள் சும்மா விட மாட்டோம். அண்ணா திமுகவுக்கு எவ்வளவு சென்னை தொடங்கி இந்திய முழுவதும் கிளை இருக்கிற கட்சி. அதை விஜய் தொட்டு பார்த்திருக்க கூடாது. மீண்டும் சீண்டினால் அவர் கடந்து வந்த பாதையின் முழு விவரங்களை நாங்கள் எடுத்துச் சொன்னால் அவரால் தாங்க முடியாது. எங்களை பொருத்தவரை நாங்கள் எங்கள் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.

24

விஜய் ஒரு முறை தனித்து நின்று போட்டியிட்டு பார்க்கட்டுமே. ஏற்கனவே பலரும் பரிட்சயமாக பார்த்த சவால் தானே. அவர் கூட்டணிக்கு வந்தாலும் மகிழ்ச்சி. அவர் கூட்டணிக்கு வராவிட்டாலும் ஏமாற்றம் இல்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட கூடாது. அவருடைய படத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தடை என்பது வேறு. எந்த சினிமா தியேட்டரில் அவரது படம் ஓடினாலும் கமர்சியல் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் நாலு பேர் உள்ளே புகுந்து அனைத்து டிக்கெட்டையும் சோதனை செய்வார்கள். ஏதாவது ஒரு வகையில் திட்டம்போட்டு தியேட்டரில் அடுத்த எம்ஜிஆர் படத்தையே ஓட்டக்கூடாது என்கிற அளவுக்கு தியேட்டர் முதலாளி முடிவுக்கு வரக்கூடிய அளவுக்கு நிர்பந்தமான நிலை எல்லாம் எம்ஜிஆருக்கு ஏற்பட்டது.

34

அதெல்லாம் அண்ணா திமுக அரசியல் வரலாற்றில் அளிக்க முடியாத சோதனைகள். அதையெல்லாம் தாண்டித்தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி அமைத்தார், அரியணையில் ஏறினார். எம்ஜிஆர் போல விஜய் நிச்சயமாக கிடையாது. இந்த நிமிடம் வரை விஜய் சினிமா துறையில்தான் இருக்கிறார். இனிமேல் தான் பொது வாழ்க்கைக்கு வர போகிறார். பொது வாழ்க்கையில் வந்து அவர் பரிணமித்தால் மகிழ்ச்சி. எம்ஜிஆர் சென்னையில் எந்த ஏழை வீடு தீப்பிடித்தாலும் தீயணைப்புத் துறையினர் செல்வதற்கு முன்னால் அவர் அங்கே போய் நின்றார். தான் சம்பாதித்த செல்வத்தை எல்லாம் நாட்டு மக்களுக்கு தான் கொடுப்பேன் என்று சொன்னார்.

44

சத்யா ஸ்டுடியோவை கல்லூரிக்கு கொடுத்தார். தான் வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தை காது கேளாதோர், வாய் பேசாதோர், கண் தெரியாததற்கான உண்டு உறைவிட பள்ளியாக கொடுத்துவிட்டு போய் இருக்கிறார். சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் தமிழ்நாடு மக்களுக்கு தருவேன் என்று சொன்னார். அதையே செய்தார். வேறு யாராவது அப்படி செய்திருந்தால் சொல்லுங்கள், நான் அவர்களுடைய கால்களை தொட்டு வணங்குகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

click me!

Recommended Stories