ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் திமுக தரப்பில் திருச்சி சிவா, அதேபோல அதிமுக தரப்பில் எம்பி தம்பிதுரை, கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸின் ஜி.கே.வாசன் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் உறுதியாக அறிவித்து விட்டது. இந்நிலையில், ராஜ்ய சபா சீட்டு உறுதி என்பதால் தான் சட்டமன்ற தொகுதிகளை குறி வைத்து வாங்க அன்புமணி தரப்பு கொண்டதாகவும் சொல்லப்பட்டது.