‘‘மரங்கள், காம்பவுண்ட் சுவர்கள், தனியார் கட்டடங்கள், கொடிக்கம்பங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்றவற்றின் மீது ஏறக்கூடாது’’ என புதுச்சேரியில் நாளை விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ நாளை 09.12.2025, செவ்வாய்க்கிழமை புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ‘புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விஜய் தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே விஜயின் இந்தப் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விஜய் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.