வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின்... மகன் உதயநிதி, மனைவி துர்காவுடன் வாக்களிப்பு...!

First Published Apr 6, 2021, 8:38 AM IST

மகன் உதயநிதி ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் வரிசையில் நின்று தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் காலை முதலே வாக்களித்து வருகின்றனர்.
undefined
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் குடும்பத்துடன் வாக்களித்தார்.
undefined
மகன் உதயநிதி ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் வரிசையில் நின்று தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்குச்சாவடி வரும் போதே தொண்டர்களிடம் தான் அமைதியான முறையில் வாக்களிக்க விரும்புவதாகவும், மக்களோடு, மக்களாக நின்று வாக்களிக்க உள்ளதால் யாரும் கூட்டம் கூட வேண்டாம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
undefined
கருணாநிதியின் மறைவிற்கு பிறகு முதன் முறையாக முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியுள்ள மு.க.ஸ்டாலின் முறையாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று குடும்பத்துடன் வாக்களித்தார்.
undefined
வாக்குப்பதிவிற்கு பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி மற்றும் மருமகளுடன் தங்களது கையில் உள்ள அடையாள மையை காண்பித்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.
undefined
ஸ்டாலினின் இல்லம் இருக்கக்கூடிய ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை மயிலாப்பூர் தொகுதியில் இருக்கிறது. கொளத்தூரியில் ஸ்டாலினும், சேப்பாக்கத்தில் உதயநிதியும் போட்டியிடுகின்றனர்.
undefined
வாக்குப்பதிவிற்கு முன்னதாக மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
undefined
அதன் பின்னர் கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் காரில் புறப்பட்டு தேனாம்பேட்டை வாக்குப்பதிவு மையத்திற்கு வந்தடைந்தனர்.
undefined
click me!