Pet Disease : செல்லப்பிராணிகளால் மனிதர்களுக்கு எத்தனை நோய்கள் ஏற்படும் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

Published : Jul 06, 2025, 10:24 AM ISTUpdated : Jul 06, 2025, 10:26 AM IST

செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு சில வகை நோய்கள் ஏற்படலாம். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
19
zoonotic diseases spread by pets

செல்லப்பிராணிகளை வளர்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். செல்லப்பிராணிகளை வளர்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் அளிக்கும் என்றாலும் அவற்றால் சில நோய் பாதிப்புகள் ஏற்படலாம். இந்த நோய்கள் ஜூனோடிக் நோய்கள் (Zoonotic Diseases) என அழைக்கப்படுகின்றன. செல்லப்பிராணிகளால் பரவும் சில வகை நோய்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

29
ரேபிஸ்

இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு ஆபத்தான வைரஸ் ஆகும் குறிப்பாக நாய், பூனை, குரங்கு, நரி, வௌவால் போன்ள பாலூட்டிகளிடமிருந்து பரவுகிறது. ரேபிஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் கடித்தாலோ அல்லது விலங்குகளின் உமிழ்நீர் மனிதனின் காயம்பட்ட இடத்தின் வழியாகவோ இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும். இது மூளையை தாக்கும் ஒரு ஆபத்தான வைரஸ் ஆகும். நோய் பாதிப்பு தீவிரமடைந்தால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.

39
டாக்ஸோபிளாஸ்மோசிஸ்

டாக்ஸோபிளாஸ்மோசிஸ் நோயானது பூனைகளின் மலம் வழியாக பரவும் ஒரு ஒட்டுண்ணி வகை நோயாகும். இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளின் உடல் வழியாக கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் பூனைகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு கடுமையான காய்ச்சல் போன்ற விளைவுகளையும் ஏற்படுத்தும்.

49
சால்மோனெல்லோசிஸ்

சால்மோனெல்லோசிஸ் என்பது செல்லப்பிராணிகளிடம் இருந்து பரவும் ஒருவகை பாக்டீரியா நோயாகும். குறிப்பாக கோழி, ஆமை, நாய் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இது மனித உடலுக்குள் சென்று குடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அதீத காய்ச்சல், தீவிர வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.

59
லெப்டோஸ் பைரோசிஸ்

லெப்டோஸ் பைரோசிஸ் என்பது எலி, நாய் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவும் ஒரு பாக்டீரியா வகை நோயாகும். கடுமையான தசை வலி, தலைவலி, காய்ச்சல் ஆகியவை இந்த நோய் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். இந்த பாக்டீரியா உடலுக்குள் சென்றால் மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்புகள், மூளை அழற்சி, கல்லீரல் பாதிப்புகள், சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

69
புருசெல்லா கேனிஸ்

நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு புதிய நோயாக புருசெல்லா கேனிஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது குணம் படுத்த முடியாத நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது கால்நடைகள் ஆடுகள் மற்றும் நாய்கள் ஆகியவையும் இந்த நோயைப் பரப்பலாம். தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் திரவங்கள், விலங்குகளின் பால், இறைச்சி மூலம் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம். இது அரிதாகவே பரவும் என்றாலும் மரணம் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

79
ரிங்வோர்ம்

பூனை, நாய் போன்ற வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் ஒரு பூஞ்சை தொற்று தான் ரிங்வோர்ம். இது தோல் அரிப்பு, தோல் சிவத்தல், தோல் தடித்தல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த பூஞ்சை பாதித்த மனிதர்களுக்கு முழங்கை, முழங்கால், இடுப்பு, அக்குள், விரல் இடுக்குகள் மற்றும் அந்தரங்க பகுதிகளில் படர்தாமரை பிரச்சனைகள் ஏற்படலாம்.

89
பறவைக் காய்ச்சல்

வீட்டில் வளர்க்கப்படும் கோழி, புறா, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவை இனங்கள் மூலமாக மனிதர்களுக்கு இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவுகிறது. இது கடுமையான சுவாசத்தொற்று பிரச்சனை மற்றும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் கிளி, புறா, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவையின் எச்சங்கள் மனிதனின் நுரையீரலை பாதித்து நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் செயலிழப்பு, மரணம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

99
தடுக்கும் முறைகள்

செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை ஏற்படுவது தெரிந்தால் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை கைவிட வேண்டும். கைவிட முடியாதவர்கள் முறையாக விலங்குகளை பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு, கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories