
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மிகவும் கவனமாக இருப்பார்கள். அதற்கான பல முயற்சிகளையும் செய்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் பல் ஆரோக்கியம் என்று வரும்போது, குழந்தை பல் துலக்கினால் மட்டும் போதும் என்று சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள். பல் துலக்கினால் பற்களில் சிக்கி உள்ள அழுக்குகளை மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்க முடியுமே தவிர , இதனால் ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள முடியாது தெரியுமா?
ஆம், சில உணவுகளின் விளைவு பற்களில் தான் தெரியும். குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு பால் பற்கள் இருப்பதால் அவை சற்று பலவீனமாகவும் இருக்கும். இது தவிர குழந்தைகள் இனிப்பு மற்றும் நொறுக்கு தீனிகளை விரும்பி சாப்பிடுகிறார்கள் இதனால் அவர்களது பல் ஆரோக்கியம் கெடும்.
குழந்தைகளின் உணவு பழக்கத்தில் பெற்றோர்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், அதனால் அவர்களுக்கு பல் சிதைவு, பல் சொத்தை, ஈறுகளில் வலி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இப்போது இந்த பதிவில் குழந்தைகளின் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில உணவுகளை பெற்றோர்கள் அவர்களுக்கு கொடுக்கக் கூடாது அது என்னென்ன
என்பதை பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க: துரித உணவில் கலக்கும் அந்த 'ஒரு' பொருள்.. இரவில் கொடுத்தால் குழந்தைகளுக்கு பேராபத்து!!
குழந்தைகளின் பல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கக் கூடாத உணவுகள் :
1. இனிப்புகள்
பொதுவாக குழந்தைகள் சாக்லேட், லாலிபாப் போன்ற மிட்டாய் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இவை அனைத்திலும் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் இது அவர்களது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும். மேலும் இது அவர்களின் பற்களில் துவாரங்களை ஏற்படுத்தும். இது தவிர பெரும்பாலான குழந்தைகள் மிட்டாய் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பது மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்களது பற்கள் சொத்தையாக வாய்ப்பு அதிகம் உள்ளது. மிட்டாய்கள் பற்களில் ஒட்டிக்கொண்டால் அது பற்சிப்பிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பால் எதுக்குங்க; எலும்புகளை உறுதியாக்கும் இந்த '5' உணவுகளை கொடுங்க!!
2. பேக் செய்யப்பட்ட உணவுகள்
குழந்தைகள் சிப்ஸ் ஸ்னாக்ஸ் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட விரும்புவார்கள். ஆனால் இது அவர்களின் பற்களுக்கு நல்லதல்ல. உண்மையில் இந்த பேக் செய்யப்பட்ட உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மேலும் இதில் மாவுச்சத்து இருப்பதால் அவை பற்களில் ஒட்டுக்கொண்டு பல் சொத்தையை ஏற்படுத்தும். எனவே இது போன்ற பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களை உங்கள் குழந்தைக்கு ஒருபோதும் வாங்கி கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக நீங்கள் வீட்டிலேயே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்.
3. ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் குறிப்பாக கோடை காலத்தில் குழந்தைகள் அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் ஐஸ்கிரீமில் செயற்கை சுவையூட்டப்பட்ட வண்ணங்கள் பயன்படுத்தப்படுவதால் இது குழந்தைகளின் பற்களில் கரையை ஏற்படுத்தும். மேலும் இது குழந்தைகளின் பல் பற்சிப்லியை சேதப்படுத்தும். இதனால் குழந்தைகளின் ஈறுகளில் வலி ஏற்படும்.
4. குளிர் பானங்கள்
உங்கள் குழந்தைக்கு நீங்கள் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுக்கும் பழக்கம் இருக்கும் என்றால் உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் அது அவர்களின் பற்களை மோசமாக பாதிக்கும். மேலும் அவர்களது பற்கள் மென்மையை இழக்கும். கூடுதலாக அதில் அதிக அளவு சர்க்கரை மற்றும் அமிலம் உள்ளதால், அது அவர்களின் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு கூல்டிரிங்ஸ் கொடுப்பதற்கு பதிலாக பாதாம் பால், மில்க் ஷேக் போன்றவற்றை வீட்டிலேயே செய்து கொடுங்கள்.
இதையும் கொடுக்காதீர்கள்:
பீட்சா, பர்கர், போன்ற நொறுக்கு தீனிகளையும், டீ காபி போன்றவையும் குழந்தைகளின் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதுபோல சர்க்கரை உள்ள எந்த ஒரு பொருளையும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டாம். அது அவர்களது பற்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.