சிறு குழந்தைகளின் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க டிப்ஸ்:
பயோட்டிணை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்: ரத்தத்தில் பயோட்டின், அதாவது வைட்டமின் பி7 அல்லது வைட்டமின் எச் குறைபாடு காரணமாக முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் குழந்தையின் உணவில் பயோடின் நிறைந்த உணவுகளை சேர்ப்பதன் மூலம் அவை முடி வளர்ச்சிக்கு உதலாம். உதாரணமாக சாக்லேட், முட்டையின் மஞ்சள் கரு, பருப்பு வகைகள், பால், உலர் பழங்கள் ஆகியவற்ற உணவில் சேர்க்க வேண்டும். ஆனால் இதை செய்யும் போது குழந்தைக்கு பயோட்டின் உள்ள உணவுப் பொருட்களால் ஒவ்வாமை இருந்தால் அதை உட்கொள்ளும் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.