
பொதுவாக பெண்கள் எல்லோரும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அழகை விரும்பாத பெண்கள் யாருமே இல்லை. வயது வித்தியாசம் கூட இல்லாமல் தங்களது சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள பெண்கள் விரும்புவார்கள். ஆனால் சில சமயம் நம் சருமமானது பருவநிலை மாற்றம் காரணமாக பாதிப்படைகிறது. அந்த வகையில் தற்போது குளிர்காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பருவத்தில் சருமம் மந்தமாக காணப்படும். ஆனாலும், இந்த சீசனிலும் உங்களது சருமத்தை நீங்கள் அழகாக வைத்துக் கொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சரும பராமரிப்பு குறிப்புகளை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதும். குளிர் காலத்தில் உங்களது சருமம் எப்போதுமே பளபளப்பாக இருக்கும்.
உடலை நீரேற்றத்துடன் வையுங்கள்:
குளிர்காலமானாலும் சரி, கோடைக்காலமானாலும் சரி தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் நீரிழப்பு பிரச்சினை ஏற்படும். அதுமட்டுமின்றி, உங்களது சருமமும் வறண்டு காணப்படும். எனவே நீங்கள் ஒரு நாளைக்கு 7-8 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உங்களது சருமம் நீரேற்றுமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
சன் ஸ்கிரீன்:
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கோடைக்காலம் மட்டுமின்றி குளிர்காலத்திலும் சான்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். இதனால் உங்களது சருமம் வறண்டு போகாமல் பளபளப்பாக இருக்கும்.
இதையும் படிங்க: முகம் பளபளப்பாக மாற இரவில் இதுல '1' முகத்தில் தடவுங்க..!!
வைட்டமின் சி உணவுகள் சாப்பிடுங்கள்:
வெயில் காலம் மற்றும் கோடை காலம் எந்த பருவத்திலும் உங்களது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க விரும்பினால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக, ஆரஞ்சு திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
வெந்நீரில் குளிக்காதே!
பொதுவாக குளிர்காலம் என்றாலே நாம் வெந்நீரில் தான் குளிக்க விரும்புவோம். ஆனால், வெந்நீரில் குளித்தால் நம்முடைய சருமம் வரட்சியாகும் மற்றும் தோலில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே குளிர்காலத்தில் முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக, சூடான நீரை ஆற வைத்துக் கூட குளிக்கலாம்.
இதையும் படிங்க: கொரியன்ஸ் போல முகம் பளபளக்க தினமும் இரவு தூங்கும் முன் இந்த '5' விஷயங்களை செய்ங்க!
மஞ்சள் பால்:
குளிர்காலத்தில் மாய்ஸ்சரைசர், சன் ஸ்கிரீன் பயன்படுத்தினாலும் குளிர்ந்த காற்று காரணமாக உங்களது சருமம் வறண்டு காணப்படும். எனவே அதை தடுக்க தினமும் இரவு தூங்கும் முன் மஞ்சள் பால் குடியுங்கள். இதில் இருக்கும் சத்துக்கள் உங்களது சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும். அதுமட்டுமின்றி சளி, இருமல் காய்ச்சல், தொண்டை புண் போன்ற பருவ தொற்றுக்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
பப்பாளி ஃபேஸ் பேக்:
பப்பாளியில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உங்களது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. இதற்கு நன்கு பழுத்த பப்பாளியை பேஸ் பேக்காக உங்களது முகத்தில் போடுங்கள். இதை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உங்களது சருமம் எப்போதும் பளபளப்பாகவே இருக்கும்.