Crispy Dosa
இரும்பு தோசைக்கல்லை பராமரிக்க முடியாமல், நான்ஸ்டிக் தவாவுக்கு மாறியவர்கள் அதிகமாக உள்ளனர். அதில் தோசையை மொறுமொறு என்று சுட முடியும் என்பதும் ஒரு பிளஸ். அதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், இரும்புக் கல்லில் தோசை வார்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதில் மொறுமொறு தோசை கிடைக்குமா?
Agal vilakku
இரும்பு தோசை துரு பிடிப்பது தான் முக்கியமான பிரச்சினை. இதனால் அதன் வழவழப்பு குறைந்து தோசை சுடுவதில் சிரமம் ஏற்படும். அப்போது, ஒரு மண் அகல் விளக்கை எடுத்து, சூடான தோசைக் கல்லில், துரு இருக்கும் இடத்தில் தேய்க்கலாம். இதன் மூலம் கரியும் துருவும் உதிர்ந்துவிடும்.
Cleaning Dosa kal
கல்லில் இருந்து துரு மற்றும் கரியை அகற்றிய பிறகு கல்லை நன்றாகத் தேய்ந்து கழுவி சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்தலாம். சுடச்சுட மொறுமொறு தோசை சூப்பரா வரும்.
Salt and lemon
இரும்பு தோசைக் கல்லைச் சுத்தம் செய்ய இன்னொரு முறையும் உள்ளது. ஒரு எலுமிச்சைப் பழகத்தை எடுத்து இரண்டாக நறுக்கி, ஒரு மூடியை கல் உப்பில் தொட்டு தோசைக் கல்லில் வைத்து நன்றாகத் தேய்க்க வேண்டும். சில நிமிடங்கள் தொடர்ந்து இப்படித் தேய்க்க வேண்டும். இப்படித் தேய்ப்பதால் துரு, கறை, எண்ணெய் பிசுக்கு எல்லாம் போய்விடும்.
Onion
இரும்பு தோசை கல்லை சுத்தம் செய்ய வேறொரு வழியும் இருக்கிறது. தோகைக் கல்லை பயன்படுத்தும் முன், ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, லேசாக எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்து விடவும். பிறகு தோசை சுட்டால் கல்லில் ஒட்டிக்கொள்ளாமல் நன்றாக வரும்.
Crunchy Dosa
புது தோசைக்கல் வாங்கினாலும் தோசை சுடுவது பெரிய கஷ்டமாக இருக்கும். அப்போதும் இந்த முறைகளில் ஒன்றைப் பின்பற்றி கல்லைச் சுத்தம் செய்துவிட்டு
பயன்படுத்திப் பார்க்கலாம். தோசை மொறு மொறுவென வரும்.