புதிய வீடு கட்டுபவர்களும், வீடு வாங்குபவர்களும் முதலில் கவனிப்பது வீட்டின் திசையைத் தான். அதில் குறிப்பாக, தெற்கு பார்த்த வீடுகள் என்றாலே பலருக்கும் ஒருவிதத் தயக்கமும் பயமும் ஏற்படுவது வழக்கம். தெற்கு நோக்கி தலைவாசல் இருந்தால் வீட்டில் செல்வம் தங்காது, பல சிக்கல்கள் வரும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். ஆனால், தெற்கு பார்த்த வீடுகள் கெட்டவை அல்ல என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் உண்மையான கருத்தாகும்.
வாஸ்து சாஸ்திரத்தின் எந்தவொரு மூல நூலிலும் எந்தத் திசையும் முழுமையாக அசுபமானது எனக் குறிப்பிடப்படவில்லை என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். வீடு எந்தத் திசையைப் பார்த்துள்ளது என்பதை விட, அந்தத் திசையில் தலைவாசல் சரியான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதே மிகவும் முக்கியம்.
இதன்படி, தெற்கு திசைச் சுவரை 8 அல்லது 9 சம பாகங்களாகப் பிரித்தால், அதன் மையப் பகுதிகளான S3 மற்றும் S4 ஆகிய இடங்களில் தலைவாசல் அமைப்பது மிகவும் சிறப்பானது. சரியான இந்த இடத்தில் வாசல் அமையும்போது, அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்; தன்னம்பிக்கை பெருகும். மேலும், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். அதேசமயம், தெற்கு திசையின் தென்மேற்கு மூலைக்கு அருகில் தலைவாசல் அமைப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
இதையும் படிங்க : Keezhadi : 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் செய்த அந்த செயல்! உலகமே வியந்து பார்க்கும் சாதனை!