
விமானப் பணிப்பெண்கள் எப்போதும் தனித்துவமான சீருடையுடன், தங்களை அழகாக காட்டும்படி மேக்கப் போட்டிருப்பார்கள். ஆனால் செருப்போ, ஷூவோ அணியாமல் ஹை ஹீல்ஸ் அணிந்திருப்பார்கள். ஏன் உயரமான பெண்கள் கூட அங்கு ஹை ஹீல்ஸ் அணிந்துள்ளனர் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது தற்செயலாக நடந்தது அல்ல. நீங்கள் டிவியிலோ, நேரிலோ விமான பணிப்பெண்களை பார்த்தால் பளபளப்பான சீருடையில், ஸ்டைலான ஹை ஹீல்ஸுடன் இருப்பார்கள். இதற்கு சில சகாப்தங்களுக்கு முந்தைய வரலாறு உண்டு.
விமானப் பணிப்பெண்கள் ஹை ஹீல்ஸ் போட்டுக் கொள்ளும் நடைமுறை 1960 மற்றும் 70 களில் தொடங்கியுள்ளது. அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த பசிபிக் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இந்த முறையை கொண்டு வந்துள்ளன. இந்த நிறுவங்கள் அறிமுகம் செய்த சீருடையில் மினி ஸ்கர்ட்கள் என சொல்லப்படும் குட்டை பாவாடை இருந்தன.
இதையும் படிங்க: பஸ் டிக்கெட் விலையில் விமானப் பயணம்! இண்டிகோவின் பண்டிகை கால சலுகை!
அன்றைய நேரத்தில் விமானத்தில் பயணம் செய்யும் பொதுமக்களில் பெருவாரியானோர் ஆண் பயணிகள் தான். அவர்களை கவரும் வகையில் ஒரு பிம்பத்தை உருவாக்குவதே அன்றைய விமான நிறுவனத்தின் இலக்காக இருந்தது. இந்த அணுகுமுறை வெற்றியும் கண்டுள்ளது. பெண்களை வைத்து வெளிப்படுத்திய கவர்ச்சி மூலம் தான் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டார்களா? என தற்போது ஆன்லைனில் பல விவாதங்கள் அரேங்கேறுகின்றன.
இதையும் படிங்க: குறைந்த விலையில் ஃப்ளைட் டிக்கெட்டை வாங்கணுமா.. கூகுளின் இந்த வசதியை பாருங்க!
இந்த பின்னணி உண்மையா?
ஹை ஹீல்ஸ் அணிவது வெறும் ஸ்டைல் அல்ல; விமானப் பணிப்பெண்ணின் தொழில்முறை உருவத்திற்கு மேலும் அழகு மற்றும் ஆளுமையை கொடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் அவர்களுடைய உயரம், நேர்த்தி ஆகியவை மீது அழகு சார்ந்த மாயையை உருவாக்கப்படுகிறது.
இந்த துறையை பொருத்தவரை, பயணிகளின் நம்பிக்கையை அதிகரிப்பது முக்கியம். அதற்கு அவர்கள் தெளிவாக, தனித்துவமாக, கூர்மையாக இருப்பது அவசியம். ஆனால் உண்மையில் ஹை ஹீல்ஸ் அணிவதால் நீண்ட நேரம் நிற்பது கடினமாக இருக்கும். இது விமானப் பணிப்பெண்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும் என்பதை பல்வேறு விமான நிறுவனங்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளன. இதன் பலனாக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சலுகை வழங்கியுள்ளது.ஹை ஹீல்ஸ் அணிவது கட்டாயம் இல்லை என கூறியுள்ளது.
ஏர் டிராவல் என்ற சீன விமான நிறுவனம், அண்மையில் தனது நிறுவன விமான பணிப்பெண்களை ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்க அனுமதித்தது. பல நிறுவனங்கள் இது மாதிரி அவர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. இந்த நடைமுறை பரவலாக்கப்பட்டால் பல விமான பணிப்பெண்களின் கால்கள் சற்று வசதியாக உணரும்.