Raksha Bandhan Wishes: ஒரு ராக்கி..ஆயிரம் பாசம்! இதயத்தை நெகிழ வைக்கும் ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்

Published : Aug 26, 2026, 04:30 PM IST

Raksha Bandhan 2026: ரக்‌ஷா பந்தன் நாளில் அன்புக்குரிய அண்ணன், தம்பி, அக்கா, தங்கையுடன் பகிர்ந்து கொள்ள மனதைத் தொடும் இதயப்பூர்வமான ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளை இந்தத் தொகுப்பில் காணலாம்.

PREV
16
ரக்‌ஷா பந்தன்

ரக்‌ஷா பந்தன் என்பது சகோதரர்– சகோதரியின் அன்பு, பாசம் மற்றும் பாதுகாப்பு உணர்வை கொண்டாடும் முக்கியமான பண்டிகையாகும். இந்த நாளில் சகோதரி, சகோதரரின் கையில் ராக்கி கட்டி நல்வாழ்த்துகள் தெரிவிப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் ரக்‌ஷா பந்தன் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் நாளை மறுநாள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

26
ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்

இந்த நன்நாளில் அதிகாலையிலேயே வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் சகோதரி தனது சகோதரரின் நெற்றியில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, ஆரத்தி எடுத்து, அவரது கையில் மணிக்கட்டு பகுதியில் ராக்கி கயிறை கட்டுவார். இந்த நேரத்தில் தனது சகோதரன் நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்க்கையை வாழ வேண்டும் என சகோதரிகள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.

36
கையில் ஒரு ராக்கி, மனதில் ஆயிரம் நினைவுகள்

ராக்கி கட்டிய பிறகு, சகோதரர் தனது சகோதரிக்கு பரிசு வழங்குவார். பின்னர் இருவரும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.

46
ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்
  • நீ எப்போதும் என் பாதுகாவலனாகவும், சிறந்த நண்பனாகவும், என் வாழ்க்கையின் நம்பிக்கையான துணையாகவும் இருக்கிறாய். இந்த அழகான ராக்கி பந்தம் என்றும் வலுப்பெறட்டும். என் அன்புச் சகோதரனுக்கு இனிய ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்!
  • நாம் எவ்வளவு வளர்ந்தாலும், வாழ்க்கை நம்மை எங்கு அழைத்துச் சென்றாலும், நம் சகோதரப் பாசம் மட்டும் என்றும் மாறாது. நம் உறவு வாழ்நாள் முழுவதும் இப்படியே தொடரட்டும். இனிய ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்!
  • ஒரு கொடியில் மலரும் இரு மலர்களைப் போன்றது அண்ணன்–தங்கை உறவு. எத்தனை தூரங்கள் வந்தாலும் இந்த பாசப் பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது. என் அன்புச் சகோதரனுக்கு இனிய ரக்‌ஷா பந்தன் நல்வாழ்த்துகள்!
56
இதயங்களை இணைக்கும் ரக்‌ஷா பந்தன்
  • என் குழந்தைப் பருவத்தை சிரிப்பாலும், மகிழ்ச்சியாலும், மறக்க முடியாத நினைவுகளாலும் அழகாக்கியதற்கு நன்றி. என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் துணையாக இருந்த என் பிரியமான சகோதரனுக்கு இனிய ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்!
  • என்னுடன் பிறந்ததாலேயே என் குழந்தைப் பருவ நினைவுகள் இன்னும் விலைமதிப்பற்றதாகிவிட்டன. என்னை மட்டுமல்ல, என் கனவுகளையும் பாதுகாத்து, நான் முன்னேற ஊக்கமளித்த உனக்கு மனமார்ந்த நன்றி!
  • தூரம் நம்மைப் பிரித்தாலும், நம் இதயங்களை ஒருபோதும் பிரிக்க முடியாது. எங்கு இருந்தாலும் நம் பாசம் என்றும் மாறாமல் தொடரட்டும். இனிய ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்!
  • சகோதரனாக மட்டுமல்லாமல், என் சிறந்த நண்பனாகவும் நீ எனக்குக் கிடைத்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். என் ஒவ்வொரு சந்தோஷத்திலும், கஷ்டத்திலும் துணையாக இருக்கும் உனக்கு இனிய ரக்‌ஷா பந்தன் நல்வாழ்த்துகள்!
66
ராக்கி ஒரு நூல் கட்டும் உறவு அல்ல
  • வாழ்க்கை என்னை எங்கு அழைத்துச் சென்றாலும், உன் அன்பும் ஆதரவும் எனக்கு எப்போதும் பாதுகாப்பான புகலிடமாக இருக்கும். என் அன்புச் சகோதரனுக்கு இனிய ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்!
  • உன்னைப் போன்ற வலிமையான, அக்கறையுள்ள, அன்பான சகோதரன் எனக்குக் கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். என் வாழ்க்கையில் நீ இருப்பதே எனக்குக் கிடைத்த மிக அழகான பரிசு!
  • என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியால் பிரகாசமாக்கும் என் அன்புக் காவலனுக்கு இனிய ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்.
  • உன் அன்பும் பாசமும் என்றும் என்னுடன் இருக்கட்டும். இந்த ரக்‌ஷா பந்தன் உன் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றி என அனைத்தையும் கொண்டு வரட்டும். எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்து, என்னை ஊக்குவித்து, பாதுகாத்ததற்கு நன்றி. இனிய ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்.
  • ராக்கி என்பது ஒரு நூல் கட்டும் உறவு அல்ல... வாழ்நாள் முழுவதும் இதயங்களை இணைக்கும் பாசப் பந்தம். என் அன்புச் சகோதரனுக்கு இனிய ரக்‌ஷாபந்தன் நல்வாழ்த்துகள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories