குறிப்பாக, வட இந்தியாவில் இந்தப் பண்டிகை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். தற்போது, இந்த ரக்ஷாபந்தன் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்கள் உடன் பிறந்தவருக்கு மட்டுமல்லாமல் மனதுக்கு நெருக்கமானவர்களைச் சகோதரர்களாக நினைத்து ராக்கியை கையில் கட்டியும், பரிசுகளை பெற்றும் மகிழ்வர்.
இதோடு ராக்கியைக் கையில் கட்டிய பெண்ணின் வாழ்க்கையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் பக்க பலமாக நிற்பேன் என சகோதர்கள் உன உறுதியளிப்பார்கள். இப்படி, இந்தியாவில் மத வழிபாடுகள் மட்டுமில்லாமல் சகோதரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் இதுப்போன்ற விழாக்கள் தான் நம் இந்தியர்களை மேலும் சிறப்பிக்கிறது.