Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி..குபேரனின் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

First Published | Sep 18, 2022, 2:50 PM IST

Sukran peyarchi 2022 Palangal: செப்டம்பர் 24ஆம் தேதி சுக்கிரன்  கன்னி ராசியில் பிரவேசிப்பார். இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு  திடீர் பண மழை பெய்யும், நிறைய வெற்றி கிடைக்கும்.
 

Sukran peyarchi 2022 Palangal:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில், சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காரணமாக குறிப்பிட்ட ராசிகளுக்கு திடீர் பண மழை பெய்யும், நிறைய வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர மாற்றம்...நவம்பர் 23 வரை இந்த ராசிக்காரர்கள் சர்வ ஜாக்கிரதையாய் இருங்கள்..

அதன்படி, கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் அஸ்தமனம் ஆனது. இதற்குப் பிறகு மீண்டும் செப்டம்பர் 24ஆம் தேதி கன்னி ராசியில் சுக்கிரன் பிரவேசிப்பார். இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பு பலன் உண்டு.  அந்த அதிர்ஷ்டக்காரர்களில் நீங்களும் ஒருவரா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 
 

Sukran peyarchi 2022 Palangal:

விருச்சிகம்:

 விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்களுக்கு பணம் சம்பாதிக்க புதிய வழிகள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி அதிக லாபம் ஈட்டுவார்கள். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். 

Tap to resize

Sukran peyarchi 2022 Palangal:

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். இந்த கிரகங்கள் அவர்களின் தொழிலில் பெரும் வெற்றியை தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பளம் உயரும். வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர மாற்றம்...நவம்பர் 23 வரை இந்த ராசிக்காரர்கள் சர்வ ஜாக்கிரதையாய் இருங்கள்..

Sukran peyarchi 2022 Palangal:

மீனம்:

மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மாற்றம் நல்ல பலன்களைத் தரும். இதனால், மீன ராசியினருக்கு வேலையில் அனுகூலமான காலம் இது என்று சொல்லலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய ஆதாயம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

Sukran peyarchi 2022 Palangal:

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் சிறப்பான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல செயல்திறன் இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வேலை சம்பந்தமாக வெளி நாடுகளுக்கு செல்ல நேரிடலாம். கடின உழைப்பின் முழு பலன் கிடைக்கும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். 

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர மாற்றம்...நவம்பர் 23 வரை இந்த ராசிக்காரர்கள் சர்வ ஜாக்கிரதையாய் இருங்கள்..

Latest Videos

click me!