குழந்தைகளுக்கு ஏற்ற 'ஜீரோ' கெமிக்கல் பல்பொடி'.. 10 கிராம்பு இருந்தா வீட்டில் தயார் செய்யலாம்!! 

First Published | Oct 19, 2024, 5:00 PM IST

Zero Chemical Tooth Powder : குழந்தைகள் முதல் பெரியோர் வரை பயன்படுத்தக் கூடிய எவ்வித வேதிப்பொருட்களும் கலக்காத இயற்கையான பல்பொடியை எப்படி வீட்டிலேயே தயார் செய்வது என்பது குறித்து இங்கு காணலாம். 

Zero Chemical Tooth Powder In Tamil

முந்தைய காலங்களில் மக்கள் எல்லாவற்றையும் இயற்கையில் இருந்து எடுத்துக் கொண்டனர். பல் துலக்குவதற்கு வேப்பங்குச்சியை பயன்படுத்தினர். ஆனால் நாகரீகம் வளர வளர எல்லா விஷயங்களுக்கும் மாற்று உருவானது. பல் துலக்குவதற்கு பல்பொடி வந்தது. அதுவே நாளடைவில் டூத் பேஸ்ட் (tooth paste) ஆக மாற்றமடைந்தது. 

Zero Chemical Tooth Powder In Tamil

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் எல்லா பொருட்களிலும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. நாம் பயன்படுத்தும் பற்பசையில் (tooth paste) ஏகப்பட்ட கெமிக்கல்ஸ் உள்ளன.  பெரும்பாலான குழந்தைகள் பல் துலக்கும் போது பேஸ்ட்டை சாப்பிட்டு விடுகின்றனர். ஒவ்வொரு முறை பல் துலக்கும் போது அதன் சுவை காரணமாக விழுங்கும் குழந்தைகள் ஏராளம்.

சிறு குழந்தைகள் இது மாதிரி அடிக்கடி பேஸ்ட் விழுங்குவது அவர்களுடைய உடல் நலத்திற்கு நல்லதல்ல என பல பெற்றோர் வருத்தப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு இயற்கை பல்பொடிதான். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயந்தி தளபதி என்பவர் பகிர்ந்திருந்தார். 

இதையும் படிங்க:  பல் ஈறுகளில் இரத்தம் கசிவா? அப்ப தினமும் காலை 'இத' செய்ங்க..

Tap to resize

Zero Chemical Tooth Powder In Tamil

இந்த பல்பொடி தயார் செய்ய கிராம்பு, உப்பு, வேப்பிலை ஆகிய மூன்று பொருட்கள் போதும். இந்த மூன்று பொருட்களுமே பற்களுக்கு நன்மை செய்யக்கூடியவை.  உப்பு பற்களில் உள்ள கூச்சத்தை நீக்க உதவுகிறது. பற்களில் படியும் கறைகளையும் கூட நீக்க உதவும். கிராம்பு நல்ல வாசனை பொருள். இது நம்முடைய பற்களை வெண்மையாக்குவதோடு ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

கிராம்பில் உள்ள வாசனை பண்புகள் வாய்துர்நாற்றத்தை நீக்கும். பல்வலிக்கு நல்ல தீர்வாக கூட கிராம்பு விளங்கும். நம் வீட்டில் வளர்க்கப்படும் வேப்பிலை நல்ல கிருமிநாசினியாக செயல்படும். இந்த இலைகளை பல்பொடியில் சேர்ப்பதால் நம்முடைய பற்களை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கிறது. குழந்தைகளுக்கு பூச்சி பல் வராமல் தடுக்க வேப்பிலை உதவுகிறது. இந்த பல்பொடியை தவறுதலாக குழந்தைகள் விழுங்கி விட்டாலும் அவர்களுக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. ஏனெனில் இவை எல்லாமே இயற்கையில் கிடைக்க கூடியது. 

Zero Chemical Tooth Powder In Tamil

செய்முறை: 

முதலில்  அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 8 முதல் 10 கிராம்புகளை வறுத்து கொள்ளுங்கள். இதனுடன் கல் உப்பு சேர்த்து வறுத்த பின் இறக்கி ஆற வைக்கவும். ஏற்கனவே பறித்து நிழலில் காய வைத்த வேப்பிலைகளையும் ஒரு பாத்திரத்தில் போட்டு வறுக்க வேண்டும். அங்கு வறுத்த பின்னர் ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆறிய உப்பு, கிராம்பு ஆகியவற்றையும் தனியே அரைத்து இதனுடன் சேர்த்துகொள்ளுங்கள். மீண்டும் ஒருமுறை அரைத்தால் மூன்றும் நன்கு கலந்துவிடும். இயற்கை பல்பொடி தயார். இதில் கெட்டுப் போகாமல் இருக்க எந்த பொருள்களும் சேர்க்கப்படுவதில்லை.  அதனால் உங்களுக்கு ஏற்ற அளவில் தயார் செய்வது நல்லது. 

Zero Chemical Tooth Powder In Tamil

சிலருக்கு பல் தேய்மானம், பல் கூச்சம், மஞ்சள் பற்கள் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். இந்த பல்பொடியை பயன்படுத்தும்போது பற்கள் வெண்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உங்களால் உணர முடியும். தொடர்ந்து பயன்படுத்தும் போது நல்ல மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும்.

இதையும் படிங்க:  பற்களை எப்படி துலக்கினாலும் மஞ்சள் கறை மட்டும் போகலையா? வெள்ளையாக மாற சூப்பர் டிப்ஸ் இதோ!!

Latest Videos

click me!