Lemon Hack : எலுமிச்சையில இருந்து அதிக ஜூஸ் எடுக்க சூப்பர் ட்ரிக் இதோ!

Published : Nov 24, 2026, 01:24 PM IST

Lemon Hack : ஃப்ரிட்ஜில் வைத்த எலுமிச்சை சில நாட்களிலேயே காய்ந்து கல் போலாகிவிடுகிறதா? எவ்வளவு பிழிந்தாலும் ஒரு சொட்டுச் சாறு கூட வரவில்லையா? கவலையே வேண்டாம்! இந்த ஒரு சின்ன ட்ரிக் செய்தால் போதும், பழத்திலிருந்து முழுச் சாறும் ஈஸியாக வெளியே வரும்.

PREV
13
எலுமிச்சையில் சாறு எடுக்க சிம்பிள் மைக்ரோவேவ் ட்ரிக்!

நம்ம அன்றாட சமையல்ல எலுமிச்சைக்குனு தனி இடம் இருக்கு. கடையில ஃப்ரெஷ்ஷா எலுமிச்சை வாங்கிட்டு வந்து ஃப்ரிட்ஜ்ல வெச்சா போதும், சில நாள்லயே காய்ஞ்சு கல் மாதிரி இறுகிடும். எவ்வளவு அழுத்திப் பிழிஞ்சாலும் ஒழுங்கா சாறு வராம, நமக்குத்தான் டென்ஷனாகும்.

ஆனா இப்போ இணையத்துல ரொம்பவே பிரபலமாகிட்டு வர்ற ஒரு எளிய 'மைக்ரோவேவ் ட்ரிக்' இந்தக் கஷ்டத்துக்கு உடனடி தீர்வா இருக்கு. எலுமிச்சையை வெறும் 10 முதல் 15 வினாடிகள் மைக்ரோவேவ்ல வெச்சு எடுத்தா போதுமாம்; உள்ள இருக்கிற சாறு மொத்தமும் சுலபமா வெளிய வருமா! அது என்ன ட்ரிக், எப்படி வேலை செய்யுதுனு இப்போ பார்க்கலாம்.

23
எலுமிச்சையை மைக்ரோவேவ் செஞ்சா என்ன ஆகும்?

எலுமிச்சைக்குள்ள இருக்குற ஜூஸை சுத்தி மென்மையான லேயர்கள் இருக்கும். மைக்ரோவேவ்ல கொஞ்ச நேரம் சூடுபடுத்தும்போதே அந்த லேயர்கள் சாஃப்டாகி, பழம் கொஞ்சம் மென்மையா மாறும். மைக்ரோவேவ் பண்றதால எலுமிச்சைக்குள்ள புதுசா ஜூஸ் உருவாகாது. ஆனா, உள்ள மாட்டிட்டு இருக்குற ஜூஸ் முழுசா எந்த கஷ்டமும் இல்லாம ஈஸியா வெளிய வர்றதுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும்.

எலுமிச்சையில இருந்து அதிக ஜூஸ் எடுக்குறது எப்படி?

முதல்ல எலுமிச்சையை சுத்தமா கழுவி, ஒரு மைக்ரோவேவ்-சேஃப் பிளேட்ல வைங்க. அதை வெறும் 10-ல இருந்து 15 செகண்ட் வரைக்கும் மட்டும் மைக்ரோவேவ் பண்ணுங்க. எலுமிச்சையோட சைஸ், மைக்ரோவேவ் பவரை பொறுத்து டைம் கொஞ்சம் மாறலாம். வெளிய எடுத்ததும் கைல பிடிக்கிற அளவுக்கு கொஞ்சம் சூடு ஆற விடுங்க. இப்போ எலுமிச்சையை கிச்சன் கவுண்டர்ல வெச்சு, உள்ளங்கையால கொஞ்சம் அழுத்தி உருட்டுங்க. அதுக்கப்புறம் பழத்தை பாதியா அறுத்து புழிஞ்சா, ஜூஸ் முழுசா ஒரு சொட்டு கூட மிச்சம் இல்லாம வெளிய வந்துடும். ஆனா, எலுமிச்சையை ரொம்ப நேரம் மைக்ரோவேவ் பண்ண கூடாது. அது ரொம்ப சூடாகாம, வெதுவெதுப்பா மட்டும் தான் இருக்கணும்.

33
இந்த ட்ரிக் நிஜமாவே வேலை செய்யுமா?

கண்டிப்பா வேலை செய்யும்! குறிப்பா ஃப்ரிட்ஜ்ல வெச்சு கெட்டியான எலுமிச்சை பழங்களுக்கு இந்த ட்ரிக் சூப்பரா வேலை செய்யும். சூடு பட்டதும் பழம் சாஃப்டா மாறும். அதனால, கைக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காம ஈஸியா ஜூஸ் புழியலாம். ஆனா, எலுமிச்சையோட ஃப்ரெஷ்னஸ், அதோட ரகம், சைஸை பொறுத்தும் ஜூஸ் இருக்கும். ரொம்ப காஞ்சுபோன எலுமிச்சையை மைக்ரோவேவ் பண்றதால மட்டும் எந்த அதிசயமும் நடந்துடாது.

மைக்ரோவேவ் இல்லனா என்ன பண்றது?

ஒருவேளை உங்க வீட்ல மைக்ரோவேவ் இல்லனாலோ இல்ல பயன்படுத்த பிடிக்கலனாலோ, எலுமிச்சையை அறுக்குறதுக்கு முன்னாடி கிச்சன் கவுண்டர்ல வெச்சு உள்ளங்கையால நல்லா அழுத்தி 15-20 செகண்ட் உருட்டினாலும் உள்ள இருக்குற லேயர்கள் தளர்வாகி ஜூஸ் ஈஸியா வரும். மொத்தத்துல, இது எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு ஸ்மார்ட் கிச்சன் ஹேக். அடுத்த முறை எலுமிச்சை புழியும் போது இந்த சிம்பிள் ட்ரிக்கை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories