செம்பு பாத்திரத் தண்ணீர் உடலுக்கு அமிர்தமா? விஷமா? கல்லீரல், குடல் பாதிக்கும் அபாயம்... எச்சரிக்கும் நிபுணர்கள்!

Published : Oct 21, 2026, 08:50 PM IST

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாவிட்டால் அதுவே நஞ்சாக மாறும் அபாயம் உள்ளது. சரியான பராமரிப்பு விதிகள் என்னென்ன?

PREV
14
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பவர்கள் செய்யும் 2 முக்கிய தவறுகள்!

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து ஆரோக்கியம் தேடும் நோக்கில் ஸ்டீல், கண்ணாடி மற்றும் மண் பாட்டில்களைப் போலவே செம்பு பாத்திரங்கள் மற்றும் பாட்டில்களுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. தண்ணீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் குறைக்கும் ஆற்றல் செம்புக்கு உண்டு என்பதை உணர்ந்து முன்னோர்கள் காலம் முதலே இது புழக்கத்தில் இருந்து வருகிறது. இருப்பினும், முறையான முன்னெச்சரிக்கைகளின்றி செம்பு பாத்திரங்களைப் பயன்படுத்தினால், அது உடலுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக விஷமாக மாறிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் பொதுவாகச் செய்யும் 2 முக்கியத் தவறுகள் மற்றும் அதற்கான எச்சரிக்கைகள்:

24
1. அமிலத்தன்மை கொண்ட பொருட்களைச் சேமிப்பது

செம்பு பாத்திரத்தில் எப்போதும் தண்ணீரை மட்டுமே ஊற்றி வைக்க வேண்டும். மாறாக, எலுமிச்சை சாறு, தக்காளி சாறு, மோர், தயிர், தேன் அல்லது பழச்சாறுகளை இதில் ஒருபோதும் ஊற்றி வைக்கக் கூடாது. அமிலத்தன்மை கொண்ட இந்தப் பொருட்கள் செம்புடன் மிக எளிதாக வேதிவினை புரிந்து உணவை நஞ்சாக மாற்றிவிடும். இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி போன்றவை ஏற்படும். சுவைக்காகக் கூட எலுமிச்சை, வெள்ளரிக்காய், புதினா போன்ற எதையும் செம்புத் தண்ணீரில் சேர்க்கக் கூடாது.

34
2. இடைவிடாமல் தொடர்ந்து பயன்படுத்துவது

செம்புப் பாத்திரங்களில் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கும்போது அதன் உட்புறத்தில் பச்சை நிறப் படிவம் படியத் தொடங்கும். இதைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் அருந்தும்போது கல்லீரல் மற்றும் குடல் சார்ந்த தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மேலும், நாள் முழுவதும் செம்பு பாத்திரத் தண்ணீரையே தொடர்ந்து குடிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் உடலில் செம்பின் அளவு தேவைக்கு அதிகமாக அதிகரித்து நச்சாக மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே, செம்பு பாத்திரத்தில் 8 முதல் 10 மணி நேரம் ஊறிய தண்ணீரை, காலையில் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிப்பது போதுமானது. இதனை ஏதேனும் நோய்களுக்கான சிகிச்சையாகக் கருதக் கூடாது; ஏற்கனவே உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது சிறப்பு உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றே அருந்த வேண்டும்.

44
பாத்திரத்தை சுத்தம் செய்யும் சரியான முறை

செம்பு பாத்திரங்களைச் சுத்தம் செய்ய ரசாயன சோப்புகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக புளி அல்லது எலுமிச்சம்பழத்துடன் உப்பு சேர்த்துத் தேய்த்துக் கழுவினால், பாத்திரத்தில் படியும் நச்சுப் படிவங்கள் முழுமையாக நீங்கிவிடும்.இத்தகைய எளிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடித்தால் மட்டுமே செம்பு பாத்திரங்களால் உடலுக்கு முழுமையான பலன் கிடைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories