வாழைப்பழத்தின் தோலில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றத் தொடங்கினால், அது நன்கு கனிந்து அதிகபட்ச இனிப்புச் சுவையை எட்டிவிட்டது என்று அர்த்தம். இந்த நிலையில் பழத்தில் இருந்த பெரும்பாலான ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் மறைந்து, நார்ச்சத்து மிகக் குறைந்த அளவிலும், சர்க்கரை அளவு உச்சத்திலும் இருக்கும்.
இருப்பினும், ஃபிளாவனாய்டுகள், பீனாலிக்ஸ் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகரிப்பதால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் இந்த நிலையில்தான் மிக அதிகமாக உள்ளன. மிகவும் மிருதுவாகவும் எளிதில் செரிமானமாகும் தன்மையுடனும் இருப்பதால், கேக் தயாரிப்பு (Baking), ஸ்மூத்திகள் (Smoothies) மற்றும் எளிதான செரிமானத்திற்கு இவை மிகவும் ஏற்றவை. அதேசமயம், ரத்தச் சர்க்கரை அளவு கொண்டவர்களுக்கு இது உகந்த தேர்வாக இருக்காது.
ஒரு வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வாழைப்பழம் பழுத்த நிலை எதுவாக இருந்தாலும், அதில் உள்ள பல அடிப்படை ஊட்டச்சத்துக்கள் ஓரளவிற்கு நிலையாகவே இருக்கும். ஒரு நடுத்தர அளவிலான பழுத்த வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
கலோரிகள்: 113
கார்போஹைட்ரேட்: 24 கிராம் (g)
நார்ச்சத்து (Fiber): 2 கிராம்
சர்க்கரை: 18 கிராம்
பொட்டாசியம்: 375 மில்லிகிராம் (mg)
வைட்டமின் B6: 0.24 மில்லிகிராம்
வைட்டமின் C: 14 மில்லிகிராம்
மெக்னீசியம்: 32 மில்லிகிராம்