தமிழிசையை அவமானபடுத்திய தெலங்கானா முதல்வர்.. யுகாதி கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!

Published : Apr 01, 2022, 10:25 AM ISTUpdated : Apr 01, 2022, 10:41 AM IST

தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் யுகாதி கொண்டாட்டத்திற்கு ஆளுநர் தமிழிசை முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

PREV
14
தமிழிசையை அவமானபடுத்திய தெலங்கானா முதல்வர்.. யுகாதி கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!

தமிழிசை கேசிஆர் மோதல்

தெலங்கானாவில் பாஜகவுக்கும் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் (டி.ஆர்.எஸ்.) இடையே ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியையும் பாஜகவையும்வுடனும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார் டிஆர்எஸ் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ். பாடி கௌசிக் ரெட்டியை ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் எம்எல்சியாக முன்னிறுத்துவதற்கான கோப்பை தமிழிசை ஒதுக்கிய நாளில் இருந்தே விரிசல் ஆரம்பித்தது. அண்மையில்  ஐதராபாத்தில் ராமானுஜரின் சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது அவரை வரவேற்காமல் புறக்கணித்தார் சந்திரசேகர ராவ். பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை சந்திரசேகர ராவ் தொடங்கியுள்ள நிலையில், அது தற்போது ஆளுநரைப் புறக்கணிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது.

24

ஆளுநர் உரை இல்லாத பட்ஜெட்

சமீபத்தில் ராஜ்பவனில் நடந்த குடியரசு தின விழாவிற்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மேலும், அரசு அனுப்பிய உரையை ஒதுக்கி வைத்துவிட்டு, தனது உரையை ஆளுநர் படித்ததாக டிஆர்எஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சமீபத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தை ஆளுநரின் உரை இல்லாமலேயே நடத்துவது எனும் முடிவை சந்திரசேகர ராவ் எடுத்துள்ளார்.

34

தமிழிசை அதிருப்தி

வழக்கமாக மாநில சட்டப்பேரவைகளில் ஆண்டு தொடக்கத்தில் ஆளுநரின் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும். தற்போது 5 மாதங்கள் கழித்து தெலங்கானாவில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. ஆனால், இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்றும் ஏற்கனவே நடந்த கூட்டத் தொடரின் தொடர்ச்சி என்பதால் ஆளுநரின் உரை தேவையில்லை என்று தெலங்கானா அரசு முடிவெடுத்து, அதை விளக்கமாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெரிவித்தது. ஆனால், தெலங்கானா அரசின் இந்த முடிவால் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கடும் அதிருப்தி அடைந்து இது மாநில அரசின் மரபை மீறிய செயல் எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

44

யுகாதி கொண்டாட்டம்

இதனிடையே,  சம்மக்க சாரக்காவின் திருவிழாவின் போது, ​​நெறிமுறை பின்பற்றப்படவில்லை. பாஜக தலைவர்கள் அமைச்சர்களை அழைப்பதில்லை என்ற குற்றம்சாட்டு எழுந்தது. இந்த பிரச்சனைகளுக்கு இடையே உகாதி கொண்டாட்டத்திற்கு முதல்வர் கே.சி.ஆரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். உறவுக்கு ஒரு புதிய தொடக்கம் இருக்கும் என்றும் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், யுகாதி கொண்டாட்டத்தில் முதல்வர் பங்கேற்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Read more Photos on
click me!

Recommended Stories