Food Delivery : தப்பா வந்த ஃபுட் ஆர்டர்! கஸ்டமருக்கு கிடைத்த ₹10,520! என்ன நடந்தது?

Published : Aug 23, 2026, 12:55 PM IST

Food Delivery : ஃபுட் டெலிவரி ஆப் மூலம் ரூ.505-க்கு ஆர்டர் செய்த 10 இன்ச் பீட்சா, 7 இன்ச் அளவிலேயே டெலிவரி செய்யப்பட்டது. வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தும் பணத்தைத் திரும்பத் தர நிறுவனம் மறுத்துவிட்டது.

PREV
15
10 இன்ச் பீட்சாவுக்கு பதில் 7 இன்ச்!

ஃபுட் டெலிவரி ஆப் மூலம் ரூ.505 செலுத்தி ஆர்டர் செய்யப்பட்ட 10 இன்ச் பீட்சா, வெறும் 7 இன்ச் அளவிலேயே டெலிவரி செய்யப்பட்டது. வாடிக்கையாளர் சேவை மையத்தில் முறையிட்டும் பணத்தைத் திரும்பத் தர மறுத்ததால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிங்க : Air Fryer : ஏர் ஃபிரையரில் சமைக்கும்போது கேன்சர் அபாயத்தை அதிகரிக்காமல் இருக்க இந்த 7 விஷயங்களை கவனிங்க!

25
வாடிக்கையாளருக்கு சாதகமான தீர்ப்பு

ஃபுட் டெலிவரி தளம் மற்றும் உணவகத்தின் சேவைக் குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை காரணமாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.10,520 இழப்பீடு வழங்க உத்தரகாண்ட் நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க : Green Chillies : வீட்டுத் தொட்டியில் பச்சை மிளகாய் வளர்க்க 6 ஈஸி டிப்ஸ்!

35
கணக்கு விவரம்

பீட்சா விலை ரூ.505, டெலிவரி கட்டணம் ரூ.15, மன உளைச்சலுக்கு ரூ.5,000 மற்றும் வழக்கு செலவுகளுக்காக ரூ.5,000 என மொத்தம் ரூ.10,520 இழப்பீடாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : Venus Transit 2026: சொந்த ராசியில் சுக்கிரன்! மாளவிய ராஜயோகத்தால் கோடீஸ்வரராகப் போகும் டாப் 4 ராசிகள்!

45
இடைத்தரகர் வாதமும், நீதிமன்ற மறுப்பும்!

தங்கள் உணவகத்தையும் வாடிக்கையாளரையும் இணைக்கும் இடைத்தரகர் மட்டுமே என்ற ஃபுட் டெலிவரி ஆப்பின் வாதத்தை நீதிமன்றம் முற்றிலும் ஏற்க மறுத்தது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையில் ஆன்லைன் டெலிவரி ஆப்புகளுக்கும் நேரடிப் பொறுப்பு உண்டு என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Plastic Business : பிளாஸ்டிக் வேஸ்ட் வச்சு மாதம் ₹40 லட்சம் சம்பாதிப்பது எப்படி? அல்டிமேட் பிசினஸ் ஐடியா!

55
டெலிவரி நிறுவனங்களின் கடமை

ஆன்லைன் தளங்கள் மூலம் விற்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு, வாடிக்கையாளர்களுக்கு விளம்பரப்படுத்தியபடி சரியாக இருப்பதை உறுதி செய்வது அந்த டெலிவரி நிறுவனங்களின் மிக முக்கியமான கடமை என்பதை இந்த நீதிமன்றத் தீர்ப்பு ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க : White Clothes : வெள்ளைத் துணிகளை எப்பயும் பளிச்சுன்னு வச்சுக்க 6 சூப்பர் டிப்ஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories