World's longest river cruise: கங்கா விகாஸ் கப்பலில் ஒரு ஜாலியான பயணம்! நீங்க ரெடியா!

First Published | Jan 11, 2023, 5:21 PM IST

உலகின் மிக நீண்ட ஆற்று நீர்வழிப்பாதையில் கங்கா விலாஸ் கப்பல் ஜனவரி 13ஆம் தேதி தனது முதல் பயணத்தைத் தொடங்குகிறது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

கங்கா விலாஸ் கப்பல் வாரணாசியில் தொடங்கி திப்ருகார் வரை 27 நகரங்கள் வழியாக 51 நாட்கள் 3200 கி.மீ. தொலைவுக்குப் பயணிக்க உள்ளது. ஒருநாள் பயணக் கட்டணம் ரூ.25 ஆயிரம்.

மூன்று தளங்களைக் கொண்ட இந்தக் கப்பல் 62 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டது. 18 அறைகளுடன் 36 பயணிகள் தங்கும் வசதியும் இருக்கிறது. முதல் பயணத்தில் 33 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க உள்ளனர். இவர்களில் 32 பேர் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டும் ஜெர்மனி நாட்டவர்.

Tap to resize

அந்தரா என்ற சொகுசுக் கப்பல் தயாரிப்பு நிறுவனம் இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளது. இதில், உடற்பயிற்சிக் கூடம், உணவகங்கள், ஸ்பா எனப் பல்வேறு வசதிகளும் உள்ளன.

சுந்தரவனக் காடுகள், காசிரங்கா தேசியப் பூங்கா முதலிய தேசிய பூங்காக்கள், நினைவுச் சின்னங்கள் என 50 சுற்றுலாத் தலங்கள் வழியாகச் செல்ல இருக்கிறது. இந்த சொகுசு கப்பலில் ஜனவரி 13ஆம் தேதி வாரணாசியில் புறப்படும் இந்தக் கப்பல் பக்ஸர், ராம்நகர், காஜிப்பூர் வழியாக 8வது நாள் பாட்னாவை அடையும். அங்கிருந்து கிளம்பி 20வது நாள் மேற்கு வங்க மாநிலத்தில் பராக்கா, முர்சிதாபாத் வழியாக கொல்கத்தா செல்லும்.

பின், வங்கதேச எல்லையான தாகாவைக் கடந்து அந்நாட்டில் 15 நாட்கள் பயணிக்கும். இறுதியில் அசாம் மாநிலத்தின் திப்ருகார் நகரைச் சென்றடையும்போது கங்கா விகாஸ் கப்பலின் முதல் பயணம் முழுமை அடையும்.

மத்திய அரசின் இன்லாண்ட் வாட்டர்வேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பு இந்தக் கப்பலை இயக்குகிறது. கப்பலை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!