வரிசையாக வரும் வார இறுதி விடுமுறை... இந்திய ரயில்வே வழங்கும் சூப்பர் டூர் பேக்கேஜ்!

First Published | Aug 16, 2024, 12:27 AM IST

பிஸியான வாழ்க்கையில் விடுமுறை நாட்களுக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் வார விடுமுறை வந்தால் எங்காவது செல்லத் திட்டமிடுவார்கள். இதுபோன்ற நாட்களில் பஸ், ரயில், விமான டிக்கெட்டுகள் கிடைப்பதும் கடினம். இந்தப் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே புதிய டூர் பேக்கேஜ்களை அறிவித்துள்ளது.
 

குழந்தைகள் பள்ளிகளில் பிஸி.. அப்பா அலுவலகங்களில் பிஸி.. அம்மா வீட்டு வேலைகளில் பிஸி என பல குடும்பங்களில் வாரம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்... எல்லோருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஸ் டைம் வார இறுதி விடுமுறை தான்.

நான்கைந்து நாட்கள் விடுமுறை கிடைத்தால், எங்கேயாவது போகலாம் என்றும் உடனே ஒரு சுற்றுலாவுக்குத் திட்டமிட்டுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக இந்திய ரயில்வே புதிதாக 5 நாள் டூர் பேக்கேஜ்களைக் கொண்டுவந்துள்ளது. 

Latest Videos


மகேஷ்வர், ஓம்காரேஷ்வர், உஜ்ஜைனி

மகேஷ்வர், ஓம்காரேஷ்வர், உஜ்ஜைனி சுற்றுலா பேக்கேஜ் 4 இரவுகள், 5 பகல்களைக் உள்ளடக்கியது. ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த சுற்றுப்பயணம் ஹைதராபாத்தில் தொடங்கும். இதில் இர் சேர்ந்து சென்றால் தலா ரூ. 26,400 செலவாகும். மூன்று பேர் சேர்ந்து பயணம் செய்தால், தலா ரூ.25,300 செலவாகும். குழந்தைகளுக்கு ரூ.22,950 மட்டுமே.

டேராடூன், ஹரித்வார், முசோரி, ரிஷிகேஷ்

டேராடூன், ஹரித்வார், முசோரி, ரிஷிகேஷ் சுற்றுலா பேக்கேஜ் 5 இரவுகளை உள்ளடக்கிய பயணத் திட்டம். ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குப் பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இரண்டு பேர் சேர்ந்து பயணம் செய்தால் ஒருவருக்கு ரூ.27,810, மூன்று பேர் சேர்ந்து பயணம் செய்தால் ஒருவருக்கு ரூ.21,920. குழந்தைகளுக்கு ரூ.13,795 மட்டுமே.

குல்மார்க், பஹல்காம், சோன்மார்க், ஸ்ரீநகர்

குல்மார்க், பஹல்காம், சோன்மார்க், ஸ்ரீநகர் சுற்றலா பேக்கேஜ் 5 இரவுகளை உள்ளடக்கியது. செப்டம்பர் 7ஆம் தேதி சண்டிகரில் இருந்து இந்தப் பயணம் தொடங்கும். இதில் இரண்டு பேர் சேர்ந்து பயணம் செய்தால் தலா ரூ.31,200, மூன்று பேர் சேர்ந்து பயணம் செய்தால் தலா ரூ.29,800 கட்டணம் வசூலிக்கப்படும். குழந்தைகளுக்கு ரூ.21350 செலவிட வேண்டும்.

முன்பதிவு செய்வது எப்படி?

இந்தச் சுற்றுலாத் திட்டத்தில் செல்ல விரும்புவோர் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இந்தப் பேக்கேஜ்களில் விமானப் பயண டிக்கெட் புக் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

click me!