வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் இனி தட்கல் டிக்கெட் கிடையாது! புதிய ரூல்ஸ் இதோ

Published : Nov 14, 2026, 10:00 PM IST

Indian Railways Alert: இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் பயணிக்கத் திட்டமிடுகிறீர்களா? அப்படியானால், அதன் முன்பதிவு விதிகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.

PREV
15
தட்கல் டிக்கெட் வசதி கிடையாது

இந்திய ரயில்வேயின் புதிய அறிமுகமான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், இரவு நேர நீண்ட தூரப் பயணத்தை வசதியாக மாற்றும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், வழக்கமான ரயில்களில் இருப்பதைப் போல இதில் தட்கல் முன்பதிவு வசதி கிடையாது. பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு காலத்திற்குள் பொதுப் பிரிவில் டிக்கெட் எடுக்க வேண்டும். அனைத்து படுக்கைகளும் பொதுப் பிரிவின் கீழ் முன்பதிவுக்கு வழங்கப்படுகின்றன. கடைசி நேரத்தில் பயணம் செய்ய முடிவெடுப்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விதி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கானது; இருக்கை வசதி கொண்ட அனைத்து வந்தே பாரத் ரயில்களுக்கும் பொருந்தும் என்று கருதக்கூடாது.

25
ஆர்ஏசி, காத்திருப்போர் பட்டியல்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆர்ஏசி எனப்படும் காத்திருப்பில் உறுதியாகும் வாய்ப்புள்ள டிக்கெட்டுகள், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் மற்றும் பகுதியளவு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகள் மூலம் பயணிக்க முடியாது. எனவே, முன்பதிவு செய்யும்போதே டிக்கெட்டின் நிலையைச் சரிபார்ப்பது அவசியம். குறிப்பாக, ஒரே முன்பதிவில் பலர் பயணம் செய்யும்போது அனைவரின் டிக்கெட் நிலையும் உறுதியாக உள்ளதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க இது உதவும்.

35
டிக்கெட் ரத்து செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கான உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்யும்போது தனிப்பட்ட கட்டண விதிகள் உள்ளன. பயண நேரத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால், டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். 72 மணி நேரத்துக்கும் 8 மணி நேரத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ரத்து செய்தால் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். புறப்படும் நேரத்துக்கு 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்பக் கிடைக்காது. இதன்படி, ரூ.2,000 டிக்கெட்டை 72 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்தால் ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டு ரூ.1,500 திரும்பக் கிடைக்கும். 72 முதல் 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் ரூ.1,000 மட்டுமே திரும்பக் கிடைக்கும்.

45
16 பெட்டிகள், 823 படுக்கைகள்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்டது. இதில் 11 மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டிகளில் 611 படுக்கைகளும், நான்கு இரண்டடுக்கு குளிர்சாதனப் பெட்டிகளில் 188 படுக்கைகளும் உள்ளன. முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் 24 படுக்கைகள் உள்ளன. மொத்தமாக 823 பேர் பயணிக்க முடியும். இந்த ரயிலை பெம்எல் நிறுவனம், சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கியுள்ளது. இதன் வடிவமைப்பு வேகம் மணிக்கு 180 கி.மீ. என்றாலும், இயக்கத்திற்கான அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. ஆகும்.

55
தற்போது இயங்கும் 3 வந்தே பாரத் ஸ்லீப்பர் வழித்தடங்கள்

2026 நவம்பர் நிலவரப்படி, இந்தியாவில் மூன்று ஜோடி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதலாவது, ஹவுரா - காமாக்யா - ஹவுரா வழித்தடத்தில் 27575/27576 என்ற எண்களில் இயங்குகிறது. இரண்டாவது, வாரணாசி - புதுடெல்லி - வாரணாசி வழித்தடத்தில் 27421/27422 என்ற எண்களில் இயக்கப்படுகிறது. மூன்றாவது, பெங்களூரு எஸ்எம்விடி - மும்பை சிஎஸ்எம்டி - பெங்களூரு வழித்தடத்தில் 27651/27652 என்ற எண்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் அனைத்தும் இரவு நேரப் பயணத்துக்கான படுக்கை வசதிகளைக் கொண்டவை. பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு ரயில் எண், பயண நாள், இருக்கை நிலை மற்றும் ரத்து விதிகளைச் சரிபார்ப்பது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories