ஆதார் அடிப்படையிலான ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பயோமெட்ரிக்ஸ் அல்லது OTP தேவை இல்லாமல், QR குறியீடுகள் மற்றும் PDF கோப்புகள் மூலம் ஆஃப்லைன் சரிபார்ப்பு செய்யப்படும்.
ஆதார் ஆணையம் (UIDAI) ஆதார் அடிப்படையிலான ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்பில் (offline identity verification) குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், ஆதார் எண் அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிராமலேயே பயனர்கள் ஆஃப்லைன் KYC-ஐ விரைவில் முடிக்க முடியும்.
25
ஆதார் KYC க்கு பயோமெட்ரிக்ஸ் தேவையில்லையா?
'தி எகனாமிக் டைம்ஸ்' அறிக்கையின்படி, ஆதார் சரிபார்ப்புக்கு பயோமெட்ரிக்ஸ் அல்லது OTP-களின் தேவை விரைவில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஆஃப்லைன் சரிபார்ப்புக்கு QR குறியீடுகள் மற்றும் PDF கோப்புகள் பயன்படுத்தப்படும். தற்போது, ஆதார் பயனர்கள் மின்னணு, பயோமெட்ரிக் மற்றும் ஆஃப்லைன் KYC-க்கு தங்கள் ஆதார் எண்ணைப் பகிர வேண்டும். ஆனால் புதிய மாற்றங்களுடன், இது தேவையில்லை.
35
குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்ஸைப் புதுப்பிக்க
7 வயது அடைந்த குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்ஸைப் புதுப்பிக்குமாறு பெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் அரசு வலியுறுத்தியுள்ளது. செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் (IANS) அறிக்கையின்படி, 7 வயதை அடைந்தும் ஆதார் பயோமெட்ரிக்ஸைப் புதுப்பிக்காத குழந்தைகளுக்கு, கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலை (Mandatory Biometric Update - MBU) நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை ஆதார் ஆணையம் (UIDAI) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகளின் கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் புதுப்பிப்பு
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் சேர்க்கைக்கு கைரேகை மற்றும் கருவிழி பயோமெட்ரிக்ஸ் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது, ஏனெனில் அந்த வயதில் இவை முழுமையாக முதிர்ச்சி அடைவதில்லை. எனவே, தற்போதுள்ள விதிகளின்படி, ஒரு குழந்தை ஐந்து வயதை அடையும் போது, கைரேகைகள், கருவிழி மற்றும் புகைப்படம் ஆகியவை அவரது/அவளது ஆதாரில் கட்டாயமாகப் புதுப்பிக்கப்பட வேண்டும்.
55
ஆதார் புதுப்பிப்பு ஏன் அவசியம்?
புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக்ஸ் கொண்ட ஆதார், வாழ்க்கையை எளிதாக்குகிறது. மேலும், பள்ளி சேர்க்கை, நுழைவுத் தேர்வுகளுக்குப் பதிவு செய்தல், உதவித்தொகை, அரசுத் திட்டங்களில் நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) போன்ற சேவைகளைப் பெறவும் ஆதார் தகவல்களைப் அப்டேட் செய்வது அவசியம்.
பெற்றோர்கள் / பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.