Top 10 fastest trains
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மக்கள் பயணிக்க மிகவும் வசதியாக உள்ளது. இதனால் தினமும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி உள்பட அதிவிரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் சில வழித்தடங்களில் ரயில்கள் அதிவேமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பதிவில் இந்தியாவில் அதிவேகமாக செல்லும் 10 ரயில்கள் குறித்து பார்ப்போம்.
Vande Bharat Train speed
1.வந்தே பாரத்
இந்தியாவில் அதிவேகமாக செல்லும் ரயில்களில் முதல் இடத்தில் இருப்பது வந்தே பாரத் ரயில்கள் ஆகும். வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகும். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இப்போது மணிக்கு 165 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் மற்ற ரயில்களை விட பயண நேரத்தை 4 அல்லது 5 மணி நேரம் குறைக்கிறது.
2.தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
நாட்டின் சில பகுதிகளில் இயங்கும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மணிக்கு 165 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலும் வந்தே பாரத் போன்று ஏசி வசதி கொண்ட ரயிலாகும். தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை மற்றும் கோவா இடையேயான 551 கிமீ தூரத்தை 8.5 மணி நேரத்தில் கடக்கிறது.
3.புது டெல்லி-போபால் இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12002) மணிக்கு 150 கி.மீ வேகத்தில் சென்று இந்த பட்டியலில் 3வது இடத்தை பெற்றுள்ளது.
india's train speed
4.மும்பை-புதுடெல்லி இடையே இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 12951) மற்றும் புது தில்லி-கான்பூர் இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் (வ.12034) ரயில்கள் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் இயங்குகின்றன.
5. புதுடெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (12302) மற்றும் புதுடெல்லி-சீல்டா துரந்தோ எக்ஸ்பிரஸ் (12260) மணிக்கு 135 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன.
6. மும்பை LTT-H.நிஜாமுதீன் AC சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22109) மணிக்கு 130 கிமீ வேகத்தில் செல்கிறது.
7. புதுடெல்லி-ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் (12273), புதுடெல்லி-அலகாபாத் துரந்தோ எக்ஸ்பிரஸ் (12276) மற்றறும் ஹவுரா-ஆனந்த் விஹார் யுவா எக்ஸ்பிரஸ் (12249) ரயில்கள் மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்தில் சென்று இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளன.
Top 10 trains speed
8. மும்பை சென்ட்ரல்-அகமதாபாத் ஏசி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் (12932) ரயிலும் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்கிறது.
9. மகாராஷ்டிரா சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் (12908) மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்கிறது.
10.கோட்டா-எச்.நிஜாமுதீன் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12059) ரயிலும் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இயங்குகிறது.