Tiger Shroff: துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராஃப்பை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மும்பையில் உள்ள ஒரு கால்பந்து கிளப்பில் இருந்து அவர் வெளியே வந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளது. அவர் நூலிழையில் உயிர் தப்பியதாக துணை போலீஸ் கமிஷனர் மோஹித் கார்க் தெரிவித்தார்.
24
கை, நெஞ்சு பகுதியில் காயம்
இந்த சம்பவத்தில் நடிகரின் டிரைவர் உட்பட இருவர் காயமடைந்தனர். டிரைவர் மீது குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டைகர் ஷெராஃப்புக்கும் கை, நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜூஹு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரவுடி அனில் பண்டிட் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
34
நேரில் சந்தித்து நலம் விசாரித்த மகாராஷ்டிரா முதல்வர்
இந்த நிலையில், கொலை முயற்சியில் இருந்து தப்பிய டைகர் ஷெராஃபின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவரை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை. டைகர் ஷெராஃபின் வலது கையில் பேண்டேஜ் சுற்றப்பட்டுள்ளது. வலது தோள்பட்டை, நெஞ்சு மற்றும் இடது மணிக்கட்டிலும் கட்டு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே டைகர் ஷெராஃப் மீது மர்ம நபர்கள் துப்பாகிச்சூடு நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Another angle of Tiger Shroff shooting . Absolutely terrifying this . https://t.co/8d9NOMlktz
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 18, 2026
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே டைகர் ஷெராஃபின் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்தார். மும்பையில் எந்தவிதமான ரவுடித்தனத்தையும் மிரட்டல்களையும் அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும், அவரது குடும்பத்திற்கு மாநில அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு டைகர் ஷெராஃபும் அவரது தாய் ஆயிஷா ஷெராஃபும் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இது ஒரு பெரிய சம்பவம். அவர்கள் 5 ரவுண்டுகள் சுட்டுள்ளனர். நல்லவேளையாக அவர் பாதுகாப்பாக இருக்கிறார். அவரது டிரைவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நான் அவரை நேரில் பார்த்தேன். துப்பாக்கி மருந்து மற்றும் கண்ணாடித் துகள்கள் பட்டு அவரது இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் அவரது தாயாரும் மிகுந்த பயத்தில் உள்ளனர். எந்த மிரட்டலையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்" என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
1990-களில் மும்பையில் ரவுடிகளின் தாக்குதல்கள் சாதாரணமாக நடந்தன, ஆனால் மும்பை போலீஸ் அதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தது என்று ஏக்நாத் ஷிண்டே சுட்டிக்காட்டினார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், மக்களை அச்சுறுத்தும் முயற்சிகளை முறியடிக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.