கொரோனா வார்டுக்குள் அதிரடியாக புகுந்த தமிழிசை..! நேரில் சென்ற ஒரே கவர்னர் இவர் தான்!

First Published Jun 9, 2020, 11:04 AM IST

தெலுங்கானாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிய, கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கொரோனா வார்டுக்கு சென்றது மருத்துவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி, தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தெலங்கானா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 92 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 3742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அறிய தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேரடியாக கொரோனா வார்டுக்கு சென்றார்.
undefined
தெலுகானாவில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போது சில மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஹைதரபாத்தில் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள நிசாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பற்றி தமிழிசை சௌந்தரராஜன் கேட்டறிந்துள்ளார்.
undefined
தன்னுடைய உயிரை பணயம் வைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகதாரத்துறை ஊழியர்களை மனதளவில் ஊக்கப்படுத்தும் விதமாக தெலுங்கான மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கொரோனா வார்டுக்கே சென்று மருத்துவர்களை நேரில் சந்தித்து பேசி, அவர்களின் பணியை வெகுவாக பாராட்டியுள்ளார்.
undefined
கொரோனா தடுப்பு பாதுகாப்பு உடையுடன், கொரோனா பாதிக்கப்பட்ட இடத்திற்கு தமிழிசை சென்று, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒரு 'ஆளுநராக சந்தித்து பேசி இருந்தாலும், அவரும் ஒரு மருத்துவர்.... என்கிற கடமையை அவர் இன்னும் சற்றும் மறக்காமல் உள்ளார்' என்று தெலங்கானா மக்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.
undefined
click me!