தேர்வு நடந்த பிறகு வினாத்தாள்களைக் கையில் வைத்திருக்கும் மோசடிக் கும்பல்கள், பழைய செய்திகளை எடிட் செய்து, அதில் வினாத்தாளைப் பதிவேற்றி, அதன் நேரத்தைக் (timestamp) காட்டாமல் மாற்றுகிறார்கள். இதன் மூலம், தேர்வு நடப்பதற்கு முன்பே வினாத்தாள் தங்களிடம் இருந்ததாக மாணவர்களை நம்ப வைத்துப் பணம் பறிக்கிறார்கள். இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே 'எடிட்' வசதி முடக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் விளக்கம்
- நிச்சயமாக எந்த ஒரு வினாத்தாளும் கசியவில்லை. இது முற்றிலும் மோசடி என NTA திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
- இந்தத் தடையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அதே வேளையில், தேர்வு நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளது.
- மாணவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு மட்டுமே தேர்வு முகமையின் இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், இதுபோன்ற தேவையற்ற வதந்திகளைப் புறக்கணித்துத் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தேசிய சைபர் குற்றத் தடுப்பு உதவி எண் (1930) அல்லது NTA-வின் அதிகாரப்பூர்வ உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க : New Aadhaar App: புதிய ஆதார் மொபைல் ஆப் அறிமுகம் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?