நாட்டிலேயே அதிக மது குடிக்கும் பெண்கள் உள்ள ஊர் எது தெரியுமா? லிஸ்ட்ல தமிழ்நாடு எந்த இடம்?

First Published | Aug 22, 2024, 2:02 PM IST

ஆண்கள் மட்டுமே மது அருந்துவார்கள், பெண்கள் மதுவைத் தொடக்கூட மாட்டார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒரு காலம். இன்றைய காலத்தில், பல பெண்கள் ஆண்களுடன் போட்டி போட்டு மது அருந்துகிறார்கள். 

ஆண்கள் மட்டுமே மது அருந்துவார்கள். பெண்கள் மது அருந்த மாட்டார்கள்.. என்பது பழைய கதை. இந்த காலத்தில் பெண்களும் மதுவை அருந்துகிறார்கள். அதுமட்டுமின்றி, பல பெண்கள் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி.. எந்தெந்த மாநிலப் பெண்கள் அதிகம் மது அருந்துகிறார்கள் என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுக்கடைகளைத் தேடிச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. NFHS-5 புள்ளிவிவரங்களின்படி.. 4.9% பெண்கள் மது அருந்துகின்றனர்.

Tap to resize

சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் மதுவுக்கு அடிமையான பெண்கள் உள்ளனர். இங்கு 5% பெண்கள் மது அருந்துகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்திலும் மதுவுக்கு அடிமையான பெண்கள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் பெண்களில் 6% க்கும் அதிகமானோர் மது அருந்துகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தில் மதுவின் வருவாயை ரூ.40,000 கோடி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த மாநிலத்தில் 6.7% பெண்கள் மது அருந்துகின்றனர்.

பெண்கள் அதிகம் மது அருந்தும் மாநிலங்களில் அசாம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அசாமில் 7.3% பெண்கள் மது அருந்துகின்றனர் என்று NFHS-5 புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் அதிகம் மது அருந்தும் மாநிலங்களில் சிக்கிம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 16.2% பெண்களுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் 53% ஆண்களும், 24% பெண்களும் மது அருந்துகிறார்கள். இந்த மாநிலத்தில்தான் அதிக பெண்கள் மது அருந்தும் பழக்கம் உள்ளது.

Latest Videos

click me!