இதனுடன், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பான குழந்தைகள் பராமரிப்பு மையங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. மகப்பேறு நலச் சட்டத்தின் கீழ் குழந்தைகள் பராமரிப்பு வசதிகளை கட்டாயமாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பெண்களுக்கு சம ஊதியம், ஒழுங்கற்ற துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு நலன்கள், ஆறு மாத மகப்பேறு விடுப்பு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகள் வழங்கும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ‘அனாதையற்ற கேரளா’ என்ற இலக்குடன் தத்தெடுப்பு மற்றும் வளர்ப்பு குடும்பங்களின் வலையமைப்பை உருவாக்கும் முயற்சியும் இடம்பெற்றுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் முன்னோடியாக மாறும் கேரளா நோக்கில் இந்த புதிய முயற்சிகள் தற்போது தேசிய அளவிலும் கவனம் பெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்..ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவிஎஸ் இறக்கிய கில்லி.. விலையும் கம்மியா இருக்கே!