பெங்களூரு பெருநகரில் உள்ள கிராந்திவீர சங்கொள்ளி ராயண்ணா உட்பட முக்கிய மூன்று ரயில் நிலையங்கள் எப்போதும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. சாதாரண நாட்களில் கூட கவுண்டருக்குச் சென்று டிக்கெட் வாங்குவது சிரமமாக உள்ளது. பண்டிகை, விடுமுறை நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டும், நெரிசலுடன் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது தென்மேற்கு ரயில்வே புதிய ரயில் டிக்கெட் முறையை அமல்படுத்தியுள்ளது. இதில் பயணிகள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. பயணிகள் எங்கு நிற்கிறார்களோ அங்கேயே டிக்கெட் பெற முடியும்.