செவ்வாயன்று, பிரேசில், இத்தாலி, இந்தோனேசியா, போர்ச்சுகல், நார்வே, சிலி, அர்ஜென்டினா, எகிப்து, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டார். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன், மோடி இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை செய்தார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்த மோடி, விண்வெளி ஆய்வு, ஆற்றல் திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்க சந்தித்தார்.