தீபாவளி ஜாக்பாட்.! விவசாயிகள் வங்கி கணக்கில் விழப்போகுது 2000 ரூபாய்- அசத்தல் தகவல்

Published : Oct 20, 2025, 08:14 AM IST

மத்திய அரசு விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு வழங்க தயாராகி வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்பட உள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி விரைவில் வெளியிடப்பட உள்ளது.

PREV
16

விவசாயம் தான் ஒரு நாட்டின் ஆணி வேர், எனவே விவசாயத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வழங்க உள்ளது. தீபாவளி பரிசாக, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM Kisan) கீழ் 21வது தவணையாக ரூ.2000 விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. 

சில விவசாயிகளின் கணக்குகளில் ஏற்கனவே பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகை தினத்திலோ பின்னரோ வரவு வைக்கப்படும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

26

 மூன்று மாநில விவசாயிகளுக்கு 21வது தவணை பிஎம் கிசான் நிதியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. செப்டம்பர் 26 அன்று இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வரவு வைக்கப்பட்டது. சமீபத்திய வெள்ளம் மற்றும் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீதமுள்ள மாநில விவசாயிகளும் விரைவில் தங்கள் வங்கிக் கணக்குகளில் இந்த நிதியைப் பெறுவார்கள் என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தங்கள் பிஎம் கிசான் கணக்கு மற்றும் வங்கி விவரங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

36

பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையும் ரூ.2,000 ஆகும்.

இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். மேலும், அவர்கள் சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும். தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அரசு நேரடியாக பணத்தை வரவு வைக்கிறது.

46

கடந்த சில ஆண்டுகளாக, ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையில் அரசு இந்த நிதியை வரவு வைத்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி வருவதால், விவசாயிகளுக்கு "தீபாவளி பரிசாக" 21வது தவணை நிதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

56

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு விவசாயியும் இ-கேஒய்சி மற்றும் நில சரிபார்ப்பை கட்டாயம் முடிக்க வேண்டும். இந்த இரண்டு செயல்முறைகளையும் முடிக்காத விவசாயிகளுக்கு 21வது தவணை நிறுத்தப்படலாம். எனவே, இந்த பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

66

அதே நேரம் 21வது தவணை வெளியீட்டு தேதி குறித்து மத்திய அரசோ அல்லது வேளாண் துறையோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், தீபாவளிக்குப் பிறகு தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் பண்டிகை காலத்தில் மீண்டும் நிதிப் பலனைப் பெறுவார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories