பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தானுக்கு எதிராக போர்க்கான பணியை தீவிரப்படுத்தியது. முப்படைகளோடு தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. சிந்து நதி ஒப்பந்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொண்ட இந்திய அரசு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 தீவிரவாத மையங்களை தாக்கி அழித்தது. இதில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
24
இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும் ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் மூலம் தாக்கிக்கொண்டது. இதில் பாகிஸ்தான் விமானப்படை தளம் உள்ளிட்டவைகள் அழிக்கப்பட்டது. மேலும் பல பகுதிகள் சேதம் அடைந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இந்தியா- பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியிலான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு திடீரென காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் பறந்ததாக கூறப்பட்டது. இதனை இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
34
indian airforce 1
இதனையடுத்து நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று காலை வரை எந்தவித தாக்குதலும் எல்லையோரங்களில் நடைபெறவில்லையென கூறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லையென தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,இந்திய விமானப்படை அப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும் தொழில்முறை ரீதியாகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
நடவடிக்கைகள் விவேகமான முறையில், தேசிய நோக்கங்களுடன் சீரமைக்கப்பட்ட முறையில் நடத்தப்பட்டன. அப்ரேஷன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை நடத்தப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை யூகிப்பதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப் படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.