Bengaluru Mysuru Highway: பெங்களூரு-மைசூரு பயணிகளுக்கு ஷாக்.. நெடுஞ்சாலையில் திடீர் மாற்றம்

Published : Jul 19, 2026, 01:42 PM IST

Bengaluru Mysuru Highway: பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் (NH-275), பல நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூடியுள்ளது.

PREV
13
பெங்களூரு மைசூரு நெடுஞ்சாலை

பெங்களூரு மற்றும் மைசூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (NH-275) வழியாக தினமும் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், நெடுஞ்சாலையில் இருந்து பல நுழைவு மற்றும் வெளியேறும் இணைப்புகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூடியுள்ளது. இந்த நடவடிக்கை டோல் கட்டண வசூலை ஒழுங்குபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். சில வாகன ஓட்டிகள் டோல் பிளாசாக்களை தவிர்த்து சர்வீஸ் சாலைகள் மற்றும் மாற்று இணைப்பு சாலைகள் வழியாக பயணம் செய்து வந்ததால், டோல் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

இதனைத் தடுக்கும் முயற்சியாக பல இடங்களில் இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த முடிவு தினசரி இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தொழில் காரணங்களுக்காக அடிக்கடி பயணம் செய்பவர்கள், தற்போது இலக்கை அடைய கூடுதல் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.

வாஷிங் மெஷினில் எத்தனை துணிகள் போட வேண்டும்? முழு லிஸ்ட் இதோ

23
டோல் பிளாசா

இதனால் நேரம் அதிகரிப்பதுடன், சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த மாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளுக்கு எளிதாக வர முடியாத சூழல் உருவாகும் என கவலை கவலை. மேலும், கூடுதல் தூரம் பயணிக்க வேண்டியதால் எரிபொருள் செலவு அதிகமாகும், அன்றாட போக்குவரத்திலும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

33
தேசிய நெடுஞ்சாலை

டோல் வரவை பாதுகாப்பது முக்கியமானதாக இருந்தாலும், உள்ளூர் மக்களையும் கருத்தில் கொண்டு மாற்று தீர்வுகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையில், பயணித்த தூரத்தின் அடிப்படையில் மட்டுமே டோல் கட்டணம் வசூலிக்கும் "தூர அடிப்படையிலான வசூல்" முறையை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் வலுத்துள்ளது. இந்த முறை செயல்பாட்டுக்கு வந்தால், பயணித்த தூரத்திற்கு ஏற்ப கட்டணம் செலுத்தும் வசதி கிடைப்பதுடன், டோல் தவிர்ப்பு சம்பவங்களும் குறையலாம் என்று பலர் கருதுகின்றனர்.

இருப்பினும், இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, டோல் வருவாயை பாதுகாப்பதோடு, பொதுமக்களின் அன்றாட பயண வசதியையும் பாதிக்காத வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறதா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories