ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போன புதுமண தம்பதி.. நீண்ட நேரமாக திறக்காத கதவு.. இறுதியில் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்.!

Published : Jun 05, 2023, 11:16 AM ISTUpdated : Jun 05, 2023, 11:18 AM IST

திருமணம் முடிந்த மறுநாளே புதுமண தம்பதி இருவரும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போன புதுமண தம்பதி.. நீண்ட நேரமாக திறக்காத கதவு.. இறுதியில் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்.!

உத்தரபிரதேச மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பிரதாப் யாதவ் (22) மற்றும் புஷ்பா (20) ஆகியோருக்கு இரு வீட்டார் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கடந்த 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. பின்னர், அனைத்து சடங்குகளும் முடிந்ததும் புதுமண தம்பதி முதலிரவுக்கு தயாரானார்கள். 

24

மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்பட்டாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் முதலில் கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, புதுமண தம்பதி இருவரும் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடப்பதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

34

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இருவரும் ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

44

இதனையடுத்து உறவினர்கள் முன்னிலையில் இருவரின் உடல்களும் ஒரே சிதையில் வைத்து தகனம் செய்யப்பட்டது. இருவருக்கும் இதய நோய் பிரச்னை எதுவும் இல்லாத நிலையில், ஒரே நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!

Recommended Stories