முன்னதாக, அதிகாலை 4:39 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் மக்கள் விளக்குகளை அணைத்து வைக்குமாறும், ஜன்னல்கள், சாலைகள், பால்கனிகள் அல்லது மொட்டை மாடிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியிருந்தார் துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து இரு நாடுகளின் டிஜிஎம்ஓக்களுக்கு இடையே அன்றைய தினம் முன்னதாக எட்டப்பட்ட புரிதலை பாகிஸ்தான் மீறியுள்ளதாகவும், இந்திய ராணுவம் எல்லை ஊடுருவல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுத்து வருவதாகவும் இந்தியா நேற்று தெரிவித்தது.
பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டுடன் எல்லையில் மீறல்கள் மீண்டும் நிகழ்ந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்க இந்திய ஆயுதப் படைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்து இருந்தார். ''கடந்த சில மணி நேரங்களாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையே இன்று மாலை முன்னதாக எட்டப்பட்ட புரிதலை மீண்டும் மீண்டும் மீறியுள்ளனர். இது இன்று முன்னதாக எட்டப்பட்ட புரிதலை மீறுவதாகும். ஆயுதப் படைகள் இந்த மீறல்களுக்கு போதுமான மற்றும் பொருத்தமான பதிலை அளித்து வருகின்றன, மேலும் இந்த மீறல்களை நாங்கள் மிகவும் தீவிரமாகக் கருதுகிறோம்" என்று மிஸ்ரி கூறினார்.