பயணிகளின் வசதிக்கேற்ப மூன்று வகை பேக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்லீப்பர் (எகானமி) வகை ரூ.24,790 முதல், 3ஏசி (தரநிலை) ரூ.42,530 முதல், 2ஏசி (கம்ஃபோர்ட்) ரூ.56,710 முதல் தொடங்குகிறது. அனைத்து பேக்கேஜ்களிலும் ரயில் பயணம், தங்கும் வசதி, காலை, மதியம், இரவு சைவ உணவு மற்றும் உள்ளூர் சுற்றுலா சேவைகள் அடங்கும்.