Sonam Wangchuk House: சோனம் வாங்சுக்கின் மண் வீடு: கடும் குளிரிலும் ஹீட்டர் இல்லாமல் சூடாக இருக்கும் ரகசியம் என்ன?

Published : Jul 28, 2026, 07:41 AM IST

Sonam Wangchuk House: லடாக்கின் கடும் குளிரை சமாளிக்க பெரும்பாலான வீடுகள் ஹீட்டர் அல்லது எரிபொருளை நம்பும் சூழலில், பொறியாளர் மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளரான சோனம் வாங்சுக் கட்டியுள்ள ஒரு மண் வீடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

PREV
15
சோனம் வாங்சுக்கின் மண் வீடு

லடாக்கைச் சேர்ந்த பொறியாளர், கல்வியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக், தனது சமூகப் பணிகள் மட்டும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறையாலும் அறியப்படுகிறார். சமீபத்தில் நடைபெற்ற நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த நிலையில், அவரது லடாக் வீட்டின் தனித்துவமான கட்டிடக்கலை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

25
லடாக் மண் வீடு

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவில், சோனம் வாங்சுக் தனது "டிரைபல் ஹவுஸ்" என அழைக்கும் வீட்டை அறிமுகப்படுத்தினார். முழுவதும் மண் கொண்டு கட்டப்பட்ட இந்த வீட்டில் கட்டிடம் பயன்படுத்தப்படவில்லை. பாரம்பரிய லடாக் கட்டிடக்கலையையும், நவீன தொழில்நுட்ப வடிவமைப்பையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த வீடு, பழமையான அறிவையும் இன்றைய நிலையை சமநிலைப்படுத்துகிறது. பாரம்பரிய கட்டுமான முறைகளை முற்றிலும் கைவிட வேண்டாம் என்பதே தனது நோக்கம் என அவர் விளக்கியுள்ளார்.

தட்கல் டிக்கெட் புக் செய்ய போறீங்களா? ஆகஸ்ட் 1 முதல் இந்த புதிய நடைமுறை அமல்!

35
டிரைபல் ஹவுஸ்

இந்த வீட்டின் முக்கிய அம்சம் Passive Solar Heating தொழில்நுட்பம். குளிர்காலத்தில் விறகோ அல்லது ஹீட்டோரோ பயன்படுத்தாமல், சூரிய வெப்பத்தை சேமித்து வீட்டை சூடாக வைத்திருக்கும் சிறப்பு "கருப்பு சுவர்" பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சுவரில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்கள் பகலில் சூரிய வெப்பத்தை உறிஞ்சி, இரவு நேரத்தில் மெதுவாக அந்த வெப்பத்தை வெளியிடுகின்றன. இதனால் கடும் பனிக்காலத்திலும் வீட்டின் உள் வெப்பநிலை இயற்கையாக பராமரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மண் சுவர்கள் கோடைகாலத்தில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன.

45
ஹீட்டர் இல்லா வீடு

வீட்டின் உள்புற அமைப்பும் லடாக் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. தரைக்கு அருகில் அமைக்கப்பட்ட குறைந்த உயர அமர்விடங்கள், திறந்த சமையலறை மற்றும் அதனுடன் இணைந்த உணவருந்தும் பகுதி ஆகியவை அடங்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சமையல் செய்பவர் தனிமைப்படாமல் இருப்பதே இந்த வடிவமைப்பின் முக்கிய நோக்கமாக சோனம் வாஞ்சுக் கூறியுள்ளார். மேலும், தண்ணீரில்லா கழிப்பறை அமைப்பு மூலம் மனித கழிவுகளை உரமாக மாற்றும் சுற்றுச்சூழல் நட்பு முறையும் வீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

55
லடாக் கட்டிடக்கலை

நடைபெற்ற மாணவர் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் காரணமாக சோனம் வாஞ்சுக் மீண்டும் தேசிய அளவில் கவனம் பெற்றிருந்தாலும், அவரது "பழங்குடியினர் இல்லம்" நிலைத்தன்மை, பாரம்பரியம் மற்றும் புதுமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கட்டிடக்கலை ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து பாராட்டப்பட்டனர்.

'குடி'மகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் பார்களில் அதிரடி மாற்றம்! முழு விவரம்!

Read more Photos on
click me!

Recommended Stories