Anant Ambani's Vantara Foundation: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத்தில் வந்தாரா என்ற பெயரில் பிரம்மாண்ட வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை உருவாக்கியுள்ளார். நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த மையத்திற்கு மத்திய அரசு பிராணி மித்ரா விருது வழங்கி உள்ளது.
வந்தாரா என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய வன விலங்குகள் மறுவாழ்வு மையத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி உருவாக்கியுள்ளார். இந்த வந்தாரா மறுவாழ்வு மையத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் அறக்கட்டளையும் இணைந்து ஆரம்பித்துள்ளன.
25
Vantara Foundation
இந்த மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் பொறுப்பில் செயல்படுகிறது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்ததிருக்கிறது இந்த மறுவாழ்வு மையம். வந்தாராவில் வன விலங்குகளுக்கான மருத்துவமனைகள், உடல்நலம் பரிசோதிக்கும் மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
35
Prani Mitra Award
வந்தாராவுக்கு மத்திய அரசு 'பிராணி மித்ரா' (பிராணிகளின் நண்பன்') என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. வந்தாரா வன விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பில் பிரமாண்டமான மருத்துவமனை உள்ளது. ஆய்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. ஐசியு, எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், எக்ஸ்-ரே, அல்ட்ரா சண்ட், எண்டோஸ்கோப்பி, டென்டல் ஸ்கேலர் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் உள்ளன.
45
Modi visits Vantara
சமீபத்தில் பிரதமர் மோடி வந்தாராவுக்கு சென்று அங்குகள்ள வன விலங்குகளைப் பார்வையிட்டார். அங்கிருக்கும் உயிரினங்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் வந்தாராவில் தான் நடத்திய போட்டோஷூட் படங்களையும் வீடியோவையும் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.
55
Vantara Foundation News
பிரதமர் மோடி சிங்கம், புலி, பாம்பு உள்ளிட்ட வன விலங்குகளுடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டன. இந்நிலையில், வந்தாரா குறித்த செய்திகளை உடனுக்குடன் பெறுவது எப்படி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் வந்தாராவின் @vantara என்ற பக்கத்தில் சமீபத்திய தகவல்களைப் பெற முடியும். இதேபோன்று எக்ஸ் தளத்தில் @ril_foundation என்ற பக்கத்தை ஃபாலோ செய்யலாம்.