India's Longest Non Stop Train : ஒரு ரயில் சுமார் 528 கிலோமீட்டர் தூரத்தை ஒரு ஸ்டேஷனில்கூட நிற்காமல் பயணிக்கிறது. வழியில் எந்தப் பயணியையும் ஏற்றிச் செல்வதில்லை. அது என்ன ரயில் என்று பார்ப்போம்.
இந்தியாவில் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தைத் தேர்வு செய்பவர்கள் ஏராளம். குறைந்த செலவு, வசதியான பயணம், இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வாய்ப்பு என ரயில் பயணத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் செல்லும் ரயில்கள் பல்வேறு முக்கிய மற்றும் சிறிய ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம்.
ஆனால், 528 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் ஒரு ரயில், இடையில் எந்த ஒரு நிலையத்திலும் நிற்காமல் கடந்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்திய ரயில்வேயில் கவனம் ஈர்க்கும் இந்த நான் ஸ்டாப் பயணம், ராஜஸ்தானின் கோட்டா முதல் குஜராத்தின் வதோதரா வரையிலான வழித்தடத்தில் நடைபெறுகிறது.
திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், கோட்டா சந்திப்பில் இருந்து புறப்பட்டு வதோதரா சந்திப்பு வரை செல்லும் பாதையில் சுமார் 528 கி.மீ. தூரத்தை இடையில் எந்த நிலையத்திலும் நிற்காமல் கடக்கிறது என்று கூறப்படுகிறது. பொதுவாக விரைவு மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உள்ள முக்கியமான நிலையங்களில் நிறுத்தப்படும். ஆனால் இந்த ரயிலின் பயணத்தில் கோட்டாவுக்கும் வதோதராவுக்கும் இடையிலான நீண்ட தூரப் பகுதியில் அடுத்த நிறுத்தம் வரை இடைநிறுத்தம் இல்லாததால், பயணிகள் தொடர்ந்து பல மணி நேரம் ரயிலில் பயணிக்க வேண்டியிருக்கும்.
கோட்டா மற்றும் வதோதரா இடையிலான இந்த நீண்ட இடைநில்லா பயணம் சுமார் 5 முதல் 6 மணி நேரம் வரை நீடிக்கக்கூடியது. இந்த நேரத்தில் ரயில் பல சிறிய மற்றும் பெரிய நிலையங்களைக் கடந்து சென்றாலும், பயணிகள் ஏறவோ இறங்கவோ ரயில் நிற்பதில்லை. இதன் மூலம் நீண்ட தூரத்தை குறுகிய நேரத்தில் கடக்கும் அனுபவத்தைப் பயணிகள் பெறுகின்றனர். குறிப்பாக ரயில் பயணத்தையும் வேகத்தையும் ரசிப்பவர்களுக்கு, இந்த நீண்ட இடைநில்லா பயணம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
ரயில் எந்த நிலையத்திலும் நிற்காமல் தொடர்ந்து செல்வதால், பயண நேரமும் சீராக இருக்கும். ஜன்னல் வழியாக மாறிக்கொண்டே இருக்கும் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி பயணிப்பதற்கும் இது வாய்ப்பளிக்கிறது. கோட்டா முதல் வதோதரா வரையிலான 528 கி.மீ. பயணம், இந்திய ரயில்வேயின் நீண்ட இடைநில்லா ரயில் பயணங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுவதால், ரயில் ஆர்வலர்கள் மத்தியில் இது தனி கவனத்தைப் பெற்றுள்ளது. ஒரு ஸ்டாப் கூட இல்லாமல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களை கடக்கும் இந்த ரயில் பயணம், இந்திய ரயில்வேயின் வேகத்தையும் நீண்ட தூர இணைப்பையும் எடுத்துக்காட்டும் சுவாரஸ்யமான தகவலாக பார்க்கப்படுகிறது.