ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்தியன் ரயில்வே – கார்த்திகை தீப திருநாளுக்கு சிறப்பு ரயில்!

First Published | Nov 9, 2024, 1:35 PM IST

Indian Railway Spiritual Tour : இந்திய ரயில்வே கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, சிவபெருமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Indian Railway Spiritual Tour

Indian Railway Spiritual Tour : இந்திய ரயில்வே பயனர்களுக்கு புதிய புதிய அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. அதிலேயும் சீனியர் சிட்டிசன்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. இதே போன்று ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப ரயில் சேவையை வழங்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் சென்ற பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு ரயில் சேவையும் வழங்கப்பட்டது.

Indian Railway, Shraddha Sethu Express

இந்திய ரயில்வே மட்டுமின்றி தமிழக அரசும் ஆன்மீகா சுற்றுலா சேவையை வழங்கி வருகிறது. தங்களது வாழ்க்கையில் இறுதி காலத்தில் ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது. அண்மையில் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் வைணவ கோயில்களுக்கு 60 முதல் 70 வயதுக்குட்பட்ட 100 பக்தர்களை இலவசமாக அழைத்து சென்றது.

இந்த நிலையில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா திட்டத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆன்மீக பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

Tap to resize

Indian Railways, Karthika Deepam Date 2024

ஆம், கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனம் மற்றும் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினரின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய ரயில்வே சுற்றுலா நிறுவனத்தின் மேனேஜர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்திய ரயில்வே சுற்றுலா திட்டத்தின் மூலமாக கார்த்திகை தீபம் திருநாள் அன்று சிவபெமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வரும் டிசம்பர் 9ஆம் தேதி 3 டையர் என்று சொல்லப்படும் 3 அடுக்கு ஏசி பெட்டி தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏசி பெட்டிகள் ஸ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது ராமநாதபுரத்திலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக அயோத்திக்கு செல்கிறது.

Indian Railway Spiritual Tour, IRCTC Tourism, Religious Tour Packages

இந்த ரயில் சேவையானது காசி, கயா, பிரக்யாராஜ் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதில் ரயில் பயணிகளுக்கும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும். இந்த ஆன்மீக சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்ய 82879 31977, 8287932070 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!