தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் முதல் ரயில் கட்டணம் உயர்வு வரை என ரயில்வேயில் இன்று முதல் 3 முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. அது என்ன என்று விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர். தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர்.
ரயில்வேயும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 1) முதல் ரயில்வேயில் மூன்று முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அது குறித்து இந்த செய்தியில் விரிவாக காண்போம்.
25
தட்கல் டிக்கெட் குதிரை கொம்பு
ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. ஆனால் அவசர காலத்தில் ரயில்வேயின் தட்கல் திட்டம் கைகொடுக்கிறது. தட்கல் திட்டம் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.
இது உடனடி அல்லது அவசர பயணத் தேவைகளுக்கு ஏற்றதாக அமைகிறது. ஆனாலும் அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் இருப்பதால் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை எடுப்பது பெரும் சவாலாக உள்ளது.
35
தட்கல் டிக்கெட் புக் செய்ய ஆதார் கட்டாயம்
சாமானிய மக்களுக்கு தட்கல் டிக்கெட் எளிதில் கிடைக்காத நிலையில், ஏஜெண்ட்டுகள் எளிதாக கெத்து, கொத்தாக தட்கல் டிக்கெட் எடுப்பது எப்படி? என மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதனால் இன்று முதல் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருப்பவர்கள் அவற்றை ஆதாருடன் இணைத்தால் மட்டுமே தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும். இதன்மூலம் இனிமேல் போலி ஏஜெண்ட்கள் களையெடுக்கப்படுவார்கள். ரயில்வேயின் இந்த முடிவுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோல் இன்று முதல் ரயில் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் கி.மீ.க்கு 2 பைசாவும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கான கட்டணம் கி.மீ.க்கு 1 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான கட்டணத்தை கிலோமீட்டருக்கு 1 பைசாவும், அனைத்து ஏசி வகுப்புகளுக்கான கட்டணத்தையும் கிலோமீட்டருக்கு 2 பைசாவும் அதிகரித்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதேபோல் 500 கி.மீ வரையில் சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.
55
சார்ட் விதிகளில் திருத்தம்
ரயில்களில் நாம் டிக்கெட் முன்பதிவு செய்தால் அந்த ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பே சார்ட் எனப்படும் இறுதிக்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. ஒருவேளை வெயிட்டிங் லிஸ்ட் இருந்து டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் இருந்தால் டிக்கெட் கிடைக்காத பயணிகள் அவசரம், அவசரமாக தங்கள் பயணங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. பயணிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இனிமேல் ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பு சார்ட் வெளியிடப்படும்.
இதனால் டிக்கெட் கன்பார்ம் ஆகாத பயணிகள் தங்களின் அடுத்தகட்ட பிளான் குறித்து அவசரமின்றி முடிவெடுக்க முடியும். மேலும் இதுவரை ஒரு மணி நேரத்துக்கு 35,000 டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் 1 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் சர்வர் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.