இதனைத் தொடர்ந்து ஜோதி மல்ஹோத்ரா சீனாவும் சென்றுள்ளார். அவரின் செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த போலீசார், இந்தியா, பாகிஸ்தான் மோதலின்போதும் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜோதி மல்ஹோத்ராவின் வங்கி கணக்கு, அவரின் பயண விவரங்கள், செலவுகள் ஆகியவற்றை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
மற்றொரு யூடியூபருக்கும் தொடர்பு
மேலும் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், பூரியைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து ஒடிசா காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மல்ஹோத்ரா, செப்டம்பர் 2024 இல் பூரிக்குச் சென்று கடலோர நகரத்தில் ஒரு பெண்ணைத் தொடர்பு கொண்டதாகவும், அவர் ஒரு யூடியூபராகவும் இருந்ததாகவும் போலீசார் கண்டறிந்தனர் என்று பூரி காவல் கண்காணிப்பாளர் (SP) வினித் அகர்வால் தெரிவித்தார்.